மேலும் அறிய

Actress Urvashi: என்னுடைய குருநாதர்.. நன்றி மறக்காத ஊர்வசி.. பாக்யராஜ் பற்றி நெகிழ்ச்சி பேச்சு..

பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி ஒன்று தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.

திரைக்கதை என வந்து விட்டால் பாக்யராஜை வெல்ல இந்திய அளவில் ஒருவரும் கிடையாது என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் 50 ஆண்டு சினிமா பயணம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை ஊர்வசி பங்கேற்று பேசினார். பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி ஒன்று தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். ஆனால் எந்த மேடை ஏறினாலும் தன்னுடைய இந்த நிலைக்கு பாக்யராஜ் தான் காரணம் என்பதை கண்டிப்பாக தெரிவிப்பார். 

இந்த நிலையில் பாக்யராஜ் 50 நிகழ்ச்சியில் பேசிய ஊர்வசி, “நான் இந்த மேடையில் பேச காரணம் என்னுடைய குருநாதர் பாக்யராஜ் தான். ஒவ்வொரு நாளும் நான் மேக்கப் போடும்போதும் அவரை நினைக்காமல் இருந்ததில்லை. அவர் காலில் விழுந்து கும்பிடுவது போல தான் நினைத்துக் கொள்வேன். இந்த 50 ஆண்டு சினிமா பயண விழாவில் நான் அத்தகைய தருணத்தை எதிர்பார்த்து தான் கலந்து கொண்டிருக்கிறேன். 50 வருடங்கள் சினிமாவில் அதே புகழ், மரியாதை, கௌரவத்துடன் ஒருவர் இருப்பது மிகவும் கடினம். ஒரு திரைக்கதை என வந்து விட்டால் பாக்யராஜை வெல்ல இந்திய அளவில் ஒருவரும் கிடையாது. இனியும் யாரும் வர முடியாது. 

இன்றைக்கும் அவர் வசனத்தை மாற்றிப் பேச எனக்கு மட்டுமே உரிமை உண்டு. பாக்யராஜின் கதையான தாய்க்குலமே தாய்க்குலமே படத்தை அவர் சிஷ்யரான முருகேஷ் தான் இயக்கினார். நானும், பாண்டியராஜனும் நடித்தோம். இரண்டு மனைவி கதை. கிளைமேக்ஸில் அதை ஏற்றுக்கொண்டு நான் போவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. 

நான் அதை மறுத்தேன். அதைக் கேள்விப்பட்ட பாக்யராஜ், ஊர்வசி அப்படித்தான் வேண்டுமென்றால் இருக்கட்டும் என சொல்லி விட்டார். அதைக் கேட்டு முருகேஷ் ஷாக்காகி விட்டார். பாக்யராஜின் கதை, அதுவும் கிளைமேக்ஸை மாற்றவே விரும்ப மாட்டார். இப்படி அவரிடம் எனக்கு உரிமை இருக்கிறது. 

அதேபோல் முந்தானை முடிச்சு படத்தில் ஒவ்வொரு காட்சியும் ஏன் எடுத்தார்கள் என தெரியாது. பாக்யராஜின் தீர்க்க தரிசனம் தான் நான் இன்றைக்கு இந்த இடத்தில் இருக்க காரணம். பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி தான் நடந்துக் கொள்வார். ஆனால் அவரிடம் இருந்து தப்பான வார்த்தை ஒன்று கூட வராது. நான் பாக்யராஜூக்கு பயப்பட மாட்டேன். 

ஒவ்வொரு முறையும் பாக்யராஜ் படம், அவரின் நிகழ்ச்சியில்   பங்கேற்க காரணம் அப்போது தான் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்த 14 வயதுக்கு செல்லும் வாய்ப்புக்கு கிடைக்கும். என் குருவை பார்க்கும் ஒரு அனுபவம் கிடைக்கும். எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய மேடை வரை என்னைக் கொண்டு வந்து விட்டீர்கள். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருப்பார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்...விஜய்க்கு துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி அறிவுரை ?
பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்...விஜய்க்கு துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி அறிவுரை ?
வசிக்க வீடில்லாமல் இருக்கிறேன்...விஜயின் மனைவி சங்கீதா புதிய குற்றச்சாட்டு
வசிக்க வீடில்லாமல் இருக்கிறேன்...விஜயின் மனைவி சங்கீதா புதிய குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
₹50,000 முன்பணத்தில் Maruti Ertiga வாங்க EMI எவ்வளவு? குடும்பத்திற்கு ஏற்ற கார் பற்றிய முழு தகவல் இதோ
₹50,000 முன்பணத்தில் Maruti Ertiga வாங்க EMI எவ்வளவு? குடும்பத்திற்கு ஏற்ற கார் பற்றிய முழு தகவல் இதோ
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
IND vs NZ  T20 WC Final: சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினம் கொண்டாடும் தமிழக அரசு.. ஒரே வேடிக்கையா இருக்கு - ராமதாஸ்
மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினம் கொண்டாடும் தமிழக அரசு.. ஒரே வேடிக்கையா இருக்கு - ராமதாஸ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Embed widget