![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Trisha: சாய் பாபா தரிசனமும் பிறந்தநாள் கொண்டாட்டமும்.. புகைப்படங்கள் பகிர்ந்து த்ரிஷா மகிழ்ச்சி!
நடிகை த்ரிஷா தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
![Trisha: சாய் பாபா தரிசனமும் பிறந்தநாள் கொண்டாட்டமும்.. புகைப்படங்கள் பகிர்ந்து த்ரிஷா மகிழ்ச்சி! Actress Trisha shares birthday celebration photos on instagram Trisha: சாய் பாபா தரிசனமும் பிறந்தநாள் கொண்டாட்டமும்.. புகைப்படங்கள் பகிர்ந்து த்ரிஷா மகிழ்ச்சி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/05/0ef2eb108600a7c147b918889e6c119c1714909968236572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
த்ரிஷா
எவர்கிரீன் என்கிற வார்த்தைக்கு பத்து பொருத்தங்களும் உள்ளவர் நடிகை த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் ஒரு காட்சியில் நடித்து திரையுலகில் எண்ட்ரீ கொடுத்தார் த்ரிஷா. அதன்பிறகு 2002 ஆம் ஆண்டு லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய படங்கள் வெளியாகி அவருக்கு ரசிகர்களிடையே நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம்,சூர்யா, கார்த்தி, சிலம்பரசன், ஜெயம் ரவி, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடனும் திரையில் கெமிஸ்ட்ரியில் அசத்தி இருக்கிறார்.
முன்னணி நடிகர்கள் தவிர்த்து சோலோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் த்ரிஷா ரசிகர்களின் மனதில் முதல் படத்தில் தோன்றிய அதே புதுமையோடு தோன்றினார். இதனைத் தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய்யுடன் 16 ஆண்டுகள் கழித்து ஜோடி சேர்ந்தார். தற்போது விஜயுடன் அவர் நடித்த கில்லி படம் திரையரங்கில் ரீ ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
பிறந்தநாள் கொண்டாட்டம்
View this post on Instagram
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் திரிஷாவுக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.கடந்த மே 4 ஆம் தேதி தனது 41வது பிறந்தநாளை திரிஷா கொண்டாடினார். தனது பிறந்தநாள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் த்ரிஷா
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)