மேலும் அறிய

Trisha - Mansoor Ali Khan: பெட்ரூம் சீன் இல்ல.. ஆபாசமாகப் பேசிய மன்சூர் அலிகான்.. வெளுத்து வாங்கிய த்ரிஷா!

நடிகர் மன்சூர் அலிகான் போன்ற நபர்கள் தான் மனித குலத்துக்கே கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக நடிகை த்ரிஷா கடுமையாக சாடியுள்ளார். 

தன்னைப் பற்றி ஆபாசமாக வர்ணித்து கொச்சையாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா 5ஆம் முறையாக ஜோடி சேர்ந்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

இந்தப் படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் முன்னதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் நடிக்க முடியாதது பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமான முறையில் பேசியிருந்தார் “வில்லனையே போட மாட்டேன் என்கிறார்கள், பாலியல் வன்முறை செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். எனக்கு ஆசையாக இருந்தது. த்ரிஷாவுடன் நடிக்க வேண்டுமா.. கட்டிலில் குஷ்புவை, ரோஜாவை கிடத்தியது போல் த்ரிஷாவையும் போடலாம் என நினைத்தேன். 150 படங்களில் நான் செய்யாத பாலியல் வன்முறையா..” என தகாத முறையில் கொச்சையாகப் பேசினார்.

மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சு இணையத்தில் கடந்த சில நாள்களாக கடும் எதிர்பார்ப்புகளை சம்பாதித்து வந்த நிலையில், இதற்கு தற்போது நடிகை த்ரிஷா எதிர்வினையாற்றியுள்ளார்.

“திரு.மன்சூர் அலிகான் சமீபத்தில் என்னைப் பற்றி அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அவமரியாதையான, பெண் வெறுப்புமிக்க, பாலியல் அத்துமீறல் பேச்சு. அவர் இதற்கெல்லாம் ஆசைப்படலாம். ஆனால் இவ்வளவு மோசமான ஒருவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

இனி என் திரை வாழ்க்கை முழுவதும் இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இது மாதிரியான நபர்கள் தான் மனித குலத்திற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்துகிறார்கள்" என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.

 

த்ரிஷாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், த்ரிஷாவுக்கு அவரது கமெண்ட் செக்‌ஷனில் ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

மேலும் படிக்க: Conjuring Kannappan : ரகளையான பேய் படம்தான்.. ஆனால் குழந்தைகள் பார்க்கலாமா? கான்ஜூரிங் கண்ணப்பன் சென்சார் என்ன சொல்லுது?

Actress Swarnamalya: விவாகரத்தால் தற்கொலை செய்து கொள்ள முடிவு.. சோகங்கள் நிறைந்த ஸ்வர்ணமால்யா வாழ்க்கை..!

தலைப்பு செய்திகள்

வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget