மேலும் அறிய

Shanthi Williams: “மோகன்லால் நன்றியில்லா மனிதர்.. அவருக்கு மரியாதை கிடையாது” - சாந்தி வில்லியம்ஸ் காட்டம்!

மோகன்லால் எங்கள் வீட்டுக்கு வந்தால் நேரடியாக சமையலறைக்கு சென்று மீன் செய்து கொடுக்க சொல்லுவார். அவரே கேரியர் எல்லாம் கொண்டு வந்து சாப்பாடு வாங்கி செல்லுவார்.

நடிகர் மோகன்லாலுக்கு நன்றியே இல்லை என பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கேரளாவைச் சேர்ந்த சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய 12வது வயதில் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பல படங்களில் சிறிய சிறிய கேரக்டரில் நடித்து பிரபலமான இவர்  2001 ஆம் ஆண்டில் சித்தி தொடரின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரீ கொடுத்தார். 

மறைந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை 1979 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சாந்திக்கு 4 குழந்தைகள் உள்ளனர். வில்லியம்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் சாந்தி வில்லியம்ஸூக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரு தளங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். 

இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசும்போது, நடிகர் மோகன்லாலை தாறுமாறாக விமர்சித்துள்ளார். அதாவது, “மோகன்லாலுக்கு நிறைய சமைத்து கொடுத்திருக்கிறேன். ஆனால் அவருக்கு நன்றியே இல்லை. தப்பாக நினைத்து கொள்ள வேண்டாம். என்னுடைய கணவர் வில்லியம்ஸ் அவ்வளவு பெரிய கேமரா மேன். இன்னைக்கு காலகட்டத்தில் கூட யாராலும் மேலே கயிறு கட்டி ஏறி வேலை பார்ப்பவர். அவர் தொழில் ரீதியாக சிறப்பானவர். மோகன்லாலின் இரண்டாவது படமாக “ஹலோ மெட்ராஸ் கேர்ள்” வெளியானது. அந்த படத்தில் மோகன்லால் வில்லனாக நடித்தார். இது எங்களுடைய படம். பூர்ணிமா பாக்யராஜ், ஊர்வசி ஆகியோரும் நடித்திருப்பார்கள்.

எங்கள் வீட்டுக்கு வந்தால் நேரடியாக சமையலறைக்கு சென்று மீன் செய்து கொடுக்க சொல்லுவார். அவரே கேரியர் எல்லாம் கொண்டு வந்து சாப்பாடு வாங்கி செல்லுவார். என் கணவர் இறந்தப்ப வரவே இல்லை. உலகத்துக்கே பிடித்த மோகன்லாலை எனக்கு சுத்தமாக பிடிக்காது. வில்லியம்ஸ் அவரை வைத்து 4 படங்கள் பண்ணினார். நான் நிறை மாதம் கர்ப்பிணியாக இருந்தபோது மோகன்லாலுக்கு காசு கொடுக்க என் நகையெல்லாம் விற்று கொடுத்தேன். என் கணவர் லால்..லால் என அவரையே சுற்றி சுற்றி வந்தார். ஆனால் இவரோ ஏர்போர்ட்டில் என்னை பார்த்து தலைதெறிக்க ஓடினார். இவனுக்கு என்னைக்குமே என்கிட்ட மரியாதை கிடையாது” என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Shanthi Williams: திருமணத்தன்று வீட்டை விட்டு ஓட்டம்.. அப்பாவால் சோகமாக மாறிய சாந்தி வில்லியம்ஸ் வாழ்க்கை!

தலைப்பு செய்திகள்

கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget