மேலும் அறிய

Shanthi Williams: திருமணத்தன்று வீட்டை விட்டு ஓட்டம்.. அப்பாவால் சோகமாக மாறிய சாந்தி வில்லியம்ஸ் வாழ்க்கை!

நான் வீட்டை விட்டு ஓடிப்போய் விடுவேன் என மிரட்டினேன். எங்க அப்பாவும், அம்மாவும் அவருக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள். என்னுடைய அக்காவிடம் சொன்னதும் அவர் திருமணம் செய்து வைக்க முடியாது என சொல்லிவிட்டார்.

திருமணம் அன்று வீட்டை விட்டு ஓடியக் கதையை நடிகை சாந்தி வில்லியம்ஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பல படங்கள், சீரியல்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நன்கு பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் ஒரு நேர்காணலில் தன் கணவர் பற்றி பேசியுள்ளார். அதில், “வில்லியம்ஸ் தான் என்னை வந்து சந்தித்தார். நெஞ்சத்தை கிள்ளாதே ஷூட்டிங் காலத்தில் தான் வந்து சந்தித்தார். நான் ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தேன். என்னோட அப்பா வந்து மலையாளத்தில் இருந்து இயக்குநர் வந்திருக்கிறார். பார்ப்பதற்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்கிறான் என சொன்னார். என்னால் பண்ண முடியாது என வில்லியம்ஸை பார்க்காமலே சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் என்னை பார்த்தே ஆகவேண்டும் என சொல்லவும், நேரில் வந்து என்னால் நடிக்க முடியாது என நேரிலும் கூறினேன். அவரோ நாளைக்கு ஷூட்டிங் வர வேண்டும் என சொல்லி பணத்தை வைத்து விட்டு போய்விட்டார். சரி என நானும் மறுநாள் ஷூட்டிங் சென்றேன். செட்டுக்குள் வில்லியம்ஸ் கிரேன் மேல் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். என்னுடைய மேக்கப் மேன் அவர் பெரிய கேமராமேன் என சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் இவர் என்ன பைத்தியமா என கேட்டேன். வில்லியம்ஸ் கீழே வந்து நான் ஒன்னும் பைத்தியம் இல்லை என சொல்லிவிட்டு சென்றார். நினைத்த மாதிரி குறிப்பிட்ட நேரத்துக்குள் காட்சியை முடிக்க முடியவில்லை. எனக்கு அன்றைக்கு வேறு ஒரு மீட்டிங் ஒன்றும் இருந்தது. நான் கிளம்பும்போது எங்க அப்பாவிடம் இருந்து போன் நம்பர் வாங்கி விட்டார். தினமும் அவரிடம் பேசி வில்லியம்ஸை மயக்கி விட்டார். ஒருநாள் வந்து அப்பா வில்லியம்ஸை திருமணம் செய்ய விருப்பப்படுவது பற்றி பேசினார். நான் பைத்தியக்காரன் மாதிரி இருக்கான் என சொல்லி மறுத்து விட்டேன்.  

நான் சம்மதிக்கவில்லை என்றால் அவர் பாம்ப்குரோவ் ஹோட்டல் மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். நான் செத்தாலும் பண்ண மாட்டேன் என சொன்னேன். இப்போதைக்கு சொல்லிக்கிறேன் என அப்பா சொன்னதும் எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன். மறுநாள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அவரின் உருவம், செயல்முறை எதுவும் வில்லியம்ஸை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை.

நான் வீட்டை விட்டு ஓடிப்போய் விடுவேன் என மிரட்டினேன். எங்க அப்பாவும், அம்மாவும் அவருக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள். என்னுடைய அக்காவிடம் சொன்னதும் அவர் திருமணம் செய்து வைக்க முடியாது என சொல்லிவிட்டார். ஆனால் எப்படியோ திருமணம் உறுதியாகி விட்டது. அப்போது நான் நெஞ்சத்தை கிள்ளாதே படம் பண்ணிக் கொண்டிருந்தேன். மகேந்திரன் சாரிடம் சொன்னேன். பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சரத்பாபு வில்லியம்ஸ் நல்ல பையன் என சொன்னார். பின்னர் மகேந்திரன் சார் நேரில் அவரை பார்த்து பேசினார். இதனைத் தொடர்ந்து வில்லியம்ஸ் என்னை பார்த்து பேசினார். 

என்னோட மனைவி விட்டுவிட்டு போய்விட்டார். அதனால் உன்னை திருமணம் செய்துக் கொள்ள நினைக்கிறேன். சினிமாத்துறையில் குடும்ப பெண்ணாக இருக்கிறாய், உன்னைப் பற்றி எந்த தவறான கருத்தும் வந்ததில்லை என்பதால் திருமணம் செய்ய நினைக்கிறேன் என சொன்னதும் நானும் மனமிறங்கி விட்டேன். ஆனால் திரும்பவும் வில்லியம்ஸ் பேச்சால் நான் கல்யாணம் அன்னைக்கு ஓடிவிட்டேன். 

கேரளாவில் தான் நிகழ்ச்சி நடந்தது. மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கோயிலுக்கு சென்ற சமயத்தில் நான் அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் மலை மீது இருந்த அத்தை வீட்டுக்கு பின்னால் உட்கார்ந்து விட்டேன். அத்தையும் அப்பாவிடம் சண்டை போட்டார். ஆனால் என்னை தரதரவென்று இழுத்து கொண்டு போய் அவர் என்னை வில்லியம்ஸூக்கு திருமணம் செய்து வைத்தார்” என சாந்தி வில்லியம்ஸ் கூறியுள்ளார்.  

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget