மேலும் அறிய

Actress Shakeela : நடிகர் பெயரை சொல்ல விசித்திராவுக்கு பயமா? என்னை அழைத்தது இவர்தான்... பகிரங்கமாக போட்டுடைத்த ஷகீலா... 

Actress Shakeela : அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என சொல்லி அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த அந்த இயக்குநர் யார் என்பதை பகிரங்கமாக போட்டு உடைத்தார் ஷகீலா.  

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக பிரபலமானவர் நடிகை ஷகீலா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற பூகம்பமான தருணம் குறித்து பகிர்ந்து இருந்தனர். 

விசித்திராவுக்கு பாராட்டு : 

அந்த வகையில் பிக் பாஸ் 7 போட்டியாளர்களில் ஒருவரான நடிகை விசித்திரா தனது வாழ்க்கையில் நடைபெற்ற மோசமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்த போது டாப் ஹீரோ ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். விசித்திராவின் இந்த பேச்சு திரையுலகில் உள்ள அனைவரையும்  உலுக்கி எடுத்தது. யார் அந்த நடிகர் என்ற பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் ஒரு நேஷனல் தொலைக்காட்சியில் பகிரங்கமாக போட்டு உடைத்த விசித்திராவின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Actress Shakeela : நடிகர் பெயரை சொல்ல விசித்திராவுக்கு பயமா? என்னை அழைத்தது இவர்தான்... பகிரங்கமாக போட்டுடைத்த ஷகீலா... 

மக்களின் கருத்து :

சினிமா உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை விசித்திரா கூறிய இந்த சம்பவம் மீண்டும் வெளிக்காட்டியுள்ளது. என்றுதான் இந்த அவல நிலை முடிவுக்கு வரும் என தெரியவில்லை. விசித்திரா அந்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு காட்டி இருக்கலாம் என பலரும் கமெண்ட் தெரிவித்துள்ளனர். 

விசித்திராவின் துணிச்சலான இந்த பேச்சை தொடர்ந்து தற்போது சக நடிகையான ஷகீலாவும் மனம் திறந்து பேசியுள்ளார். நானும் விசித்திராவும் தோழிகள்தான். நாங்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளோம். அதே போன்ற ஒரு கசப்பான அனுபவத்தை நானும் எதிர்கொண்டுள்ளேன். 

ஷகீலாவின் தைரியம் :

ஒரு முறை இயக்குநர் சத்தியநாராயணா ராவ் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அழைத்தார். அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என சொல்லி தான் என்னை கூப்பிட்டார். இந்த படத்தில் நான் நடிக்க சம்பளம் வாங்கிவிட்டேன். அடுத்த பட சான்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம். அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை என கூறிவிட்டேன். நடிகர் அல்லரி நரேஷின் தந்தை தான் அந்த இயக்குநர். இப்போது அவர் உயிருடன் இல்லை. தெலுங்கு திரையுலமே திரண்டு வந்து என்னை கேட்டாலும் நான் தைரியமாக இந்த உண்மையை சொல்வேன். இன்றும் நான் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன். 

Actress Shakeela : நடிகர் பெயரை சொல்ல விசித்திராவுக்கு பயமா? என்னை அழைத்தது இவர்தான்... பகிரங்கமாக போட்டுடைத்த ஷகீலா... 

எதற்கு இந்த ரீ என்ட்ரி?

இது போன்ற ஒரு கசப்பான அனுபவத்தால் தான் விசித்திரா சினிமாவை விட்டு விலகியதாக கூறிய நிலையில் திரும்பவும் எதற்காக மீண்டும் மீடியாவுக்குள் வந்து குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் இன்டஸ்ட்ரிக்குள் வருவதற்கு இதன் மூலம் விளம்பரம் செய்கிறாரா என தெரியவில்லை. 

படுக்கைக்கு அழைத்த நடிகரின் பெயரை வெளிப்படையாக சொல்லிவிட்டால் தெலுங்கு திரையுலகில் இனி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என பெயரை வெளிப்படையாக சொல்லவில்லையோ என யோசிக்கிறேன். இருந்தாலும் விசித்திராவின் இந்த தைரியம் பாராட்டிற்குரியது. 

விசித்திராவை தொடர்ந்து நடிகை ஷகீலாவும் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்த விவகாரத்தை வெளிப்படையாக கொண்டு வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget