Watch Video : ''தனியா இருக்க விடமாட்டோம் '' - சமந்தாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ வைரல்!
”சாதனா அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி அதற்கு கேப்சனாக “உங்களது நெருங்கிய நண்பர்களை எப்போதும் தனிமையில் விடாதீர்கள்.”
சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் அதிக கவனம் பெறும் நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. அவரது ஃபிட்னஸ் வீடியோக்கள் , சேலஞ்ச் வீடியோக்கள் , டிரிப் புகைப்படங்கள் , நாய்க்குட்டிகளுடனான நேரம் என அனைத்தையும் தொடர்ச்சியாக பதிவேற்றி வருகிறார்.
View this post on Instagram
அந்த வகையில் சமந்தாவின் மேக்கப் ஆர்டிஸ்டும் அவரது நெருங்கிய தோழிகளில் ஒருவருமான சாதனா சிங்குடன் அவரது வீட்டில் நேரம் செலவிட்டிருக்கிறார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்வதற்காக செய்த டான்ஸ் பிராக்டிஸ் என பலவற்றையும் சமந்தா பதிவேற்றியிருக்கிறார்.
View this post on Instagram
அதே போல சமந்தாவின் நண்பர்களான சாதனா , ஜுகால்கருடன் இணைந்து சமந்தா வைரல் ஆடியோ ஒன்றிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். சாதனா அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி அதற்கு கேப்சனாக “உங்களது நெருங்கிய நண்பர்களை எப்போதும் தனிமையில் விடாதீர்கள். மாறாக அவர்களை இப்படி தொந்தரவு செய்யுங்கள் “ என பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக சாதனா மற்றும் ஜுகால்கருடன் ஃபிரண்ட்ஸ் டேட் என டின்னர் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.
View this post on Instagram
சமந்தா நடிப்பில் இறுதியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது . இதனை தொடர்ந்து டோலிவுட், பாலிவுட் , ஹாலிவுட் என அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கிறார். தெலுங்கில் உருவாகும் இரண்டு படங்கள் தமிழ் மொழியிலும் பை-லிங்குவலாக வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.