மேலும் அறிய

Thandatti : என்னை கொண்டுபோய் சேர்த்தது பாகுபலி... தண்டட்டி படத்தில் தங்கபொண்ணாக மாறிய ரோகிணி

அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் தண்டட்டி படத்தில் தங்கபொண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரோகிணி

இயக்குநர் ராம் சங்கையா இயக்கி பசுபதி நடித்திருக்கும் படம் தண்டட்டி. தட்டட்டி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. பசுபதி, ரோகிணி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து சாம் சி.எஸ் பின்னணி இசை கொடுத்திருக்கிறார். தண்டட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ரோகிணி

மகளிர் மட்டும், மறுபடியும், விருமாண்டி, பாகுபலி ஆகியத் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகர்  ரோகிணி. மேலும் கேள்விகள் ஆயிரம் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது அதிரடியான கேள்விகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். தொடர்ச்சியால குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரோகிணி. தற்போது தண்டட்டி படத்தில் நடித்துள்ளார்

தங்கப்பொண்ணு

தண்டட்டி திரைப்படத்தில் நடிகர் ரோகிணி தங்கப்பொண்ணு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரோகிணி. அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கரியரில் முக்கியமான திரைப்படங்கள் குறித்தும் தனது திரையுலக அனுபவத்தை பற்றியும் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் நடிக்காம விட்டதுக்காக ஃபீல் பன்னேன்

அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது குறித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ரோகிணி “ நிறைய அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள். அவர்கள் கதையை விவரிக்கும்போதே எனக்கு ஓரளவிற்குத் தெரியும். அந்தப் படம் நன்றாக இருக்குமா இல்லையா என்று. வெகு சில நேரங்களில் இந்த கணிப்பு தவறாக இருக்கும். விஜய் தேவரகொண்டா நடித்த முதல் படத்தில்  நடிக்க எனக்கு கதை சொன்னார் இயக்குநர். ஆனால் அந்த கதை எனக்கு சரியாக பிடிபடவில்லை. ஆனால் படம் வெளியான பின்புதான் அந்தப் படத்தை நான் ஏன் மிஸ் செய்தேன் என்று வருத்தப்பட்டேன். தண்டட்டி திரைப்படத்தின் கதையைக் கேட்ட அந்த நொடியே நான் அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டேன். இளைஞர்களுடன் வேலை செய்யும்போது நாம்  விரல் நுனியில் நிற்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் அவ்வளவு வேகமாக இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சறுக்கி விழவும் செய்வார்கள்.

பாகுபலிதான் என்னை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது.

தனக்கு பிடித்த படங்களை பற்றி தெவித்தார் ரோகிணி “மகளிர் மட்டும் , மறுபடியும், விருமாண்டி, பாகுபலி ஆகிய படங்கள் எனக்கு மிகப் பிடித்த படங்கள். குறிப்பாக பாகுபலி படம் என் கரியரில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இன்றைய தலைமுறையிடம் என்னை கொண்டு சேர்த்த திரைப்படம் பாகுபலிதான்.

தண்டட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாஸிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ஆதி சாய்குமார் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படம்!
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினியும் மோகன்லாலும் உறவினர்களா! இத்தன நாள் இது தெரியாம போச்சே
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ரஜினி படத்தில் லாபமில்லையா ? ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
LocalBody Election: உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
உள்ளாட்சி தேர்தலுக்கு நோ..! அதிகாரிகளை கொண்டு வேலையை முடிக்க அரசு திட்டம் -என்ன ஆச்சு?
Chennai Airport: மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
மீண்டும் தாமதமாகும் 3வது முனையம் திறப்பு..! சென்னை விமான நிலையத்திற்கு விடிவு காலம் எப்போது?
School Leave: விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
விடாத கனமழை - சென்னை உள்ளிட்ட எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை?
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
நூற்றாண்டு பாரம்பரியம், ABP நாடுவின் அடுத்த பரிணாமம்..! 24 மணி நேர நேரலை - குவியும் வாழ்த்துகள்
Weather Update: வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..! மழை தீவிரமடையும் என IMD வார்னிங்
TN Weather News: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் - தமிழக வானிலை அறிக்கை
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Embed widget