Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
ஈரோட்டிற்கு வருகை தந்த கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் விஜய்யின் கட்சி பெயரை கத்தி கூச்சலிட்டனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகு ஷோலாே ஹீரோயின் கதையம்சம் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இவரது நடிப்பில் அண்மையில் வெளியான உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இவருடன் சுகாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைத்தெோடர்ந்து ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
ஷோலோ ஹீரோயின்
மலையாளத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக ஸ்கோர் செய்து வருகிறார். கதாநாயகர்களுடன் இணைந்து டூயட் பாட்டிற்கு மட்டும் ஆடி பாடி வந்தாலும், அவ்வப்போது நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தூள் கிளப்பி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து சாணிக் காகிதம் படத்தில் ஆக்ரோஷமான ஹீரோயினாக நடித்திருந்தார்.
காதல் திருமணம்
கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் தனது காதலர் அந்தோணியை திருமணம் செய்து கொண்டார். பள்ளி காலத்தில் இருந்து இவர்களுக்கு இடையில் காதல் இருந்து வந்தது அவர்களின் திருமணத்தின் போது தான் தெரியவந்தது. இது மட்டுமல்லாமல், அவர்களின் திருமணம் கிருஸ்த்துவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ள உப்பு கப்புரம்பு படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த 4ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஹார்ட் அட்டாக்
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உப்பு கப்புரம்பு படத்தின் டப்பிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார். இதில், அவர் பலவித மாடுலேஷனலி பேசி அசத்தியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்னப்பா இப்படி நடிக்கிறாங்க என பாராட்டியுள்ளனர். ஆனால், டப்பிங் ஸ்டுடியோவில் இருந்த போது நிச்சயம் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என நினைத்திருப்பார்கள் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி வரைலாகி வருகிறது.
ரசிகர்களை பார்த்து ஹார்ட் விட்ட கீர்த்தி சுரேஷ்
படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இன்று ஈரோட்டிற்கு வருகை தந்த அவர், அங்கு தனியார் மொபைல் கடை ஒன்றை திறந்து வைத்தார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் மைக்கை பிடித்து பேசிய கீர்த்தி சுரேஷ், அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் சிலர் TVK.. TVK.. Tvk என குரல் எழுப்பினர். அதற்கு சற்றும் யோசிக்காமல் கீர்த்தி சுரேஷ் தனது கையில் ஹார்ட் சின்னத்தை காட்டினார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதை அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





















