மேலும் அறிய

Kayadu Lohar: சமூக வலைத்தளங்களில் இருந்து கயாடு லோஹர் விலகல்.. இதுதான் காரணமா? - ரசிகர்கள் சோகம்!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கயாடு லோஹர். கன்னடத்தில் 2021ம் ஆண்டு முகில்பேட் என்ற படம் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு முடிவை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க பிரபல நடிகை கயாடு லோஹர் முடிவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது இன்றைக்கு கணிக்க முடியாத அளவுக்கு மாறி விட்டது. ஒரே நாளில் அடிமட்டத்தில் இருப்பவரை உச்சத்துக்கும், உச்சத்தில் இருப்பவரை தரை மட்டத்துக்கும் கொண்டு சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் நம்மை அடிமையாக மாற்றும் சக்தியை கொண்டிருக்கிறது. இதனால் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், மன உளைச்சல் மறுபுறம் இருக்கவே செய்கிறது. அதில் திரைத்துறை சார்ந்த பிரபலங்களும் விதிவிலக்கல்ல. 

நடிகை கயாடு லோஹர்

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கயாடு லோஹர். கன்னடத்தில் 2021ம் ஆண்டு முகில்பேட் என்ற படம் மூலம் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2022ல் மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு படம் மூலம் என்ட்ரீ கொடுத்தார். இதன்பின்னர் ஐ பிரேம் யு படம் மூலம் மராத்தி மொழியில் கயாடு லோஹர் அறிமுகமானார். இதனையடுத்து தான் 2025ம் ஆண்டு தமிழில் டிராகன் படம் மூலம் கயாடு லோஹர் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து பவளமல்லி என்ற ஆல்பம் பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதற்கிடையில் தமிழில் இதயம் முரளி, இம்மோர்டல், அரசன், மஞ்சனத்தி ஆகிய படங்களில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். 

Also Read: நடிகைகளிடம் அத்துமீறல்.. சிக்கலில் பிரபல இயக்குநர்.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா?

சமூக வலைத்தளத்திலிருந்து விலகல்

இந்த நிலையில் கயாடு லோஹர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக ஊடகங்களிலிருந்து சற்று விலகி இருக்கிறேன். சில நேரங்களில், நம் உடலுக்கு நாம் அளிக்கும் ஓய்வைப் போலவே மனதிற்கும் அத்தகைய ஓய்வு தேவைப்படுகிறது. வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்து, சிறிது காலம் இதிலிருந்து விலகி, திரைக்கு அப்பால் உள்ள நிஜ வாழ்க்கையிலும் என்னுடனும் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நான் உணர்கிறேன். இங்கு எனக்கு ஆதரவளித்த, ஊக்கமளித்த மற்றும் அன்பைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

உங்கள் செய்திகளும் அன்பும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருக்கமாட்டேன்; ஆனால் முக்கியமான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவை எனது குழுவினரால் இந்த கணக்கின் மூலம் பகிரப்படும். அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு கிடைக்கட்டும். விரைவில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார். அவர் விலகியதற்கான காரணம் சொல்லப்படாவிட்டாலும், கயாடு லோஹரை பற்றிய பல வதந்திகள் சமீபகாலமாக இணையத்தில் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
How Car Airbags Work: இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
இவ்ளோ நாள் கார் ஓட்டுறீங்களே, ஏர்பேக்குல என்ன இருக்கு, அது உயிர எப்படி காப்பாத்துதுன்னு தெரியுமா.?
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Embed widget