மேலும் அறிய

Kajol Quits Social Media: ‘வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழல்’ - சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறும் கஜோல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை கஜோல்.

சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு வெளியேறுவதாக தகவல் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் நடிகை கஜோல்.

நடிகை கஜோல் தான் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு வெளியேறுவதாக திடீர் முடிவு எடுத்துள்ளார். தனது வாழ்க்கையில்  மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்களா என   நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். 

கஜோல் சில காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வந்தார். பெரும்பாலான நேரங்களில் தனது கணவர் அஜய் தேவ்கன், மகன் யுக் மற்றும் மகள் நைஸா என தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். மேலும் தனது நடிப்பில் வெளிவந்த படங்களை நினைவுபடுத்தும் விதமாக அவை  குறித்தும் பதிவிடுவார். அண்மையில் தான் நடித்து வெளியான துஷ்மன் திரைப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார் கஜோல். 

அதில் “நான்  நடிக்க சம்மதித்த படங்களில் என்னை மிக அச்சுறுத்தியப் படம் துஷ்மன். அதே நேரத்தில் நான் பார்த்தப் படங்களில் என்னை அதிகம் பயம் கொள்ளச் செய்த படமும் இதுதான்.இன்றுவரை இந்தப் படத்தை என்னால் பயப்படாமல் பார்க்க முடியாது.” என பதிவிட்டிருந்தார்.  ரேவதி இயக்கிய சலாம் வெங்கி என்கிற திரைப்படத்தில் நடித்த கஜோல். இதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

லஸ்ட் ஸ்டோரீஸ்

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமன்னா, கஜோல், மிருனால் தாகூர் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பாலியல் சார்ந்த கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆந்தாலாஜி லஸ்ட் ஸ்டோரிஸ். சமூகத்திலும் பாலியல் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இந்த படம். மேலும் திரைப்படங்களில் பாலியல் ரீதியிலான கதைகள் வெளிப்படையாக பேசப்படாத காரணத்தினால் பாலிவுட்டின் நான்கு முக்கிய இயக்குநர்கள் இந்த ஆந்தாலாஜியை இயக்க நியமிக்கப்பட்டார்கள்.  இயக்குநர் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹார், ஜோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜீ ஆகியோர் முதல் பாகத்தை இயக்கினார்கள். ராதிகா ஆப்தே, மனிஷா கொய்லாரா, கியாரா அத்வானி, விக்கி கெளஷல் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் நடித்திருந்தார்கள்.

 முதல் பாகத்தில் இயக்குனர் அனுராக் கஷ்யப் மற்றும் ஜோயா அக்தர் இயக்கிய பகுதிகள் பரவலாக பேசப்பட்டன. தற்போது லஸ்ட் ஸ்டோரீஸின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman : விஜயை விமர்சிக்கிறதா TN2026 படம் ? சீமான் கொடுத்த விமர்சனம் பாருங்க
Seeman : விஜயை விமர்சிக்கிறதா TN2026 படம் ? சீமான் கொடுத்த விமர்சனம் பாருங்க
Jana Nayagan: கேபிள் டிவியில் ஒளிபரப்பான ஜனநாயகன்.. கூண்டோடு தூக்கிய போலீசார்!
Jana Nayagan: கேபிள் டிவியில் ஒளிபரப்பான ஜனநாயகன்.. கூண்டோடு தூக்கிய போலீசார்!
என் மகனுக்கு வாழ்க்கை கொடுத்தார் சிவகார்த்திகேயன்..பிரபல நடிகர் பிரேம் குமார் பேட்டி
என் மகனுக்கு வாழ்க்கை கொடுத்தார் சிவகார்த்திகேயன்..பிரபல நடிகர் பிரேம் குமார் பேட்டி
20 அடி ஆழம் நீரில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்த ஆர்யா
20 அடி ஆழம் நீரில் ஆக்‌ஷன் காட்சியில் நடித்த ஆர்யா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெயர் மாற்றிப் பாருங்கள்.. சும்மா இருக்க மாட்டோம்!" - தட்சிண பிரதேச விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விடுத்த பகீர் எச்சரிக்கை!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக; அடிமை அதிமுக: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Edappadi Palaniswamy: தனிப்பட்ட விமர்சனம் செய்தால் பதிலடி கொடுப்போம்.. இபிஎஸ் வார்னிங்!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Ramadoss Health: ’’ராமதாஸ் உடல்நிலை எப்படி இருக்கு? இவங்கதான் காரணம்’’- அன்புமணி பரபர பேட்டி!
Trump Hormuz Blockade: இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
இப்படி ஆப்பு வச்சுட்டியே ட்ரம்ப்பே.! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்; இந்தியாவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்.!
"டிவிகேவுக்கு கேமரா சின்னத்தில் ஓட்டு போடுங்க" பெரம்பூரில் TVKவினர் பிரச்சாரம்- குழப்பத்தில் மக்கள்!
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Embed widget