விபத்தில் சிக்கி படுகாயமடைந்த காஜல் அகர்வால்? இணையத்தில் தீயாக பரவும் தகவல்
Kajal Aggarwal : நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் ஒரு பெரிய விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இன்னும் சில தகவல்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுகின்றன. இந்த தகவலை உறுதிபடுத்த ஊடகங்கள் காஜல் அகர்வாலை தொடர்புகொள்ள முயற்சித்த போது அவர் ஃபோன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அவருக்காக பிரார்திக்க தொடங்கிவிட்டனர். அண்மையில் தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார் காஜல் அகர்வால். தனது விடுமுறையை கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக அப்லோட் செய்தும் வந்தார். இப்படியான நிலையில் அவர் விபத்திற்குள்ளானதாக பரவி வரும் செய்தி அவரது ரசிகர்களை கலங்கடித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட சிறப்பு தகவலின்படி தான் நலமாக இருப்பதாகவும் தற்போது தான் பிஸியாக இருப்பதால் பின்னர் தொடர்புகொள்வதாகவும் காஜல் அகர்வால் தரப்பில் இருந்து கூறியுள்ளார். அவர் விபத்திற்கு உள்ளானதாக சமூக வலைதளத்தில் பரவி வரும் தகவல் என்பது நிரூபனமாகியுள்ளது. மேலும் சில மணி நேரத்திற்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பர பதிவு ஒன்றை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் பரத் நடித்த பழநி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். குறுகிறது காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்சத்திற்கு சென்றார் . தமிழில் விஜயுடன் துப்பாக்கி , சூர்யாவுடன் மாற்றான் , கார்த்தி, தனுஷ், விஷால் , கமல் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியில் ரன்பீர் கபூர் சாய் பல்லவி நடித்து வரும் ராமாயணா படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரியாக நடித்து வருகிறார். அண்மையில் தெலுங்கில் வெளியான கண்ணப்பா படத்தில் சிறிய கேமியோ ரோலில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.





















