மேலும் அறிய

Ileana : வாவ்.. காதலர் இவர்தானா? ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த இலியானா..

தன் குழந்தையின் தந்தையை வெளி உலக்குக்கு காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த இலியானா, டேட் நைட் என்ற பெயரில் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

தனது காதலரை வெளி உலக்குக்கு காட்டாமல் ரகசியமாக வைத்திருந்த இலியானா, டேட் நைட் என்ற பெயரில் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’இவர் தானா அவர்?’ என கேட்கவைத்துள்ளார்

தமிழ் திரையுலகில் தமன்னா நடித்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய் நடித்த நண்பன் படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டார். அடுத்தடுத்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் அவரின் கவனம் பாலிவுட்டில் திரும்பியது. இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இலியானா காதல் விவகாரங்களில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார்.

2018-ஆம் ஆண்டு வெளிநாட்டு புகைப்பட கலைஞரை காதலிப்பதுடன், அவருடன் லிவிவ் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. சில மாதங்களில் இருவருக்கும் பிரேக்கப் ஆனதாக கூறப்பட்டது. 2022ம் ஆண்டு மாலத்தீவு சென்ற இலியானா இந்தி நடிகை காத்ரினா கைஃபின் சகோதரர் செபாஸ்டியன் லாரண்ட் மிச்சேலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு மறுப்பு கூறாத இலியானா மவுனமாக இருந்தார். 


Ileana : வாவ்.. காதலர் இவர்தானா? ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த இலியானா..

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக டீ-ஷர்ட் மூலம் அறிவித்தார். அதன் பின்னர் பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு தான் உண்மையாக கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஆனால், கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பதை மட்டும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்தார். யார் அந்த ரகசியக் காதலர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில்,  பிளர் போட்டோவை வெளியிட்ட இலியானா டிவிஸ்ட் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், யார் அந்த ரகசியக் காதலர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, தன்னுடைய காதலனின் புகைப்படத்தை இலியானா பகிர்ந்துள்ளார். டேட் நைட் என்ற பெயரில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இலியானாவுடன் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உள்ளார். ஆனாலும், அவர் யார், அவரின் பெயர் என்ன என்பது குறித்த எந்த விவரங்களை கூறாமல் தொடர்ந்து சஸ்பென்ஸை காட்டி வருகிறார். 

ஒரு தாயாக இருப்பதன் உணர்வையும், தனக்கு துணையாக தன்னுடைய லைஃப் பார்ட்னர் இருப்பதாகவும், தான் இன்னும் ஸ்ட்ராங்காக வேண்டும் என்றும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக, தைரியமாக எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வதாகவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இலியானா பகிர்ந்து வருகிறார். விரைவில் குழந்தையின் தந்தை குறித்த அடையாளங்களையும் இலியானா அறிவிப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget