Sudha Chandran | ஒவ்வொரு முறையும் சோதனை; வேதனையா இருக்கு: பிரதமர் மோடியிடம் ஹெல்ப் கேட்கும் சுதா சந்திரன்..
பிரபல பரதநாட்டியக் கலைஞரும், நடிகையுமான சுதா சந்திரன் விமான நிலையத்தில் தனது செயற்கைக் காலை அகற்றச் சொல்லி நேர்ந்த சோதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
பிரபல பரதநாட்டியக் கலைஞரும், நடிகையுமான சுதா சந்திரன் விமான நிலையத்தில் தனது செயற்கைக் காலை அகற்றச் சொல்லி நேர்ந்த சோதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வணக்கம் சார், இது எனது தனிப்பட்ட மனக்குமுறல். நான் சுதா சந்திரன், நடனக்கலைஞர் மற்றும் நடிகை. நான் எனது இளம் வயதில் ஓர் விபத்தில் எனது காலை இழந்தேன். ஆனாலும் நான் துணிச்சலுடன் மீண்டு வந்தேன். செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு நடனமாடி நான் நமது தேசத்துக்காகப் பெருமை சேர்த்து வருகிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் நான் தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல விமான நிலையம் வரும்போதும் எனது செயற்கை கால் நிமித்தமாக சோதனை செய்யப்படுகிறேன். நான் பலமுறை என் காலில் இடிடி (Explosive Trace Detector) பரிசோதனை செய்து கொள்ள வேண்டினேன். ஆனால், நான் எனது செயற்கைக் காலை கழற்றி காட்டினாலே என்னை விடுகின்றனர்.
இப்படி ஒவ்வொரு முறையும் நான் செய்வது எப்படி சாத்தியமாகும். இப்படிட் தான் ஒரு பெண்ணை மதிப்பார்களா? நான் மத்திய அரசிடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். அவர்கள் என்னை ஒரு மூத்த குடிமகள் என்று கூட தயவு காட்ட மாட்டார்களா?
View this post on Instagram
நான் முற்றிலும் நொறுங்கிவிட்டேன். என்னுடைய கோரிக்கை மாநில, மத்திய அரசை எட்டும் என நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில் என்னைப் போன்ற பலருக்காகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் வேண்டுகிறேன். இந்தியாவில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வயதை அறிவிக்கும் வகையில் சீனியர் சிட்டிசன் என்ற அட்டையை பிரதமர் மோடி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கும் மாண்பு தேவை:
மாற்றுத் திறனாளிகளுக்கும் உண்மையிலேயே மாண்பு தேவை என்பதை இங்கே உணர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. பொதுப் போக்குவரத்து மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தப்படும் அளவுக்கு இல்லை. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களும் மாற்றுத் திறனாளிகளுக்கானதாக இல்லை.
நீண்ட காலமாகவே நம் தமிழ்நாட்டில் மெரினா பீச்சில் மாற்றுத் திறனாளிகள் செல்லும் வகையில் ஒரு பிரத்யேக பேவ்மென்ட் கோரப்படுகிறது. அதுவும் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது. இப்போது தான் சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் காது கேளாதோருக்கான சிறப்பு ஒளிபரப்பை செய்கின்றன. மேலை நாடுகள் பிரதமர், அதிபர் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சியில் பேசும்போது அருகிலேயே காது கேளாதோருக்கான சிறப்பு சைகை மொழி பெயர்ப்பாளர் இருப்பார். ஆனால் நாம் நம் நாட்டில் ஒரு பிரபலமான பெண் அதுவும் மூத்த குடிமகள் இது போன்ற அவஸ்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது வேதனையான செயல்.
சிஐஎஸ்எஃப் வருத்தம்:
இதற்கிடையில் சுதா சந்திரனுக்கு நேர்ந்த அசவுகரியத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப் வருத்தம் தெரிவித்துள்ளது.