Actress Ambika: இந்த இரண்டு நடிகர்கள மிஸ் பண்ணிட்டேன்; வருத்தம்தான்.. அம்பிகா ஓபன்டாக்..!
” எனக்கு இரண்டு நடிகர்களோட நடிக்க முடியலைனு வருத்தம்”
80 களில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அம்பிகா. ரஜினி,கமல் என முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர். கமல் - அம்பிகா காம்போவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறார்கள். தற்போது அம்பிகா சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். தான் சினிமாவில் கடந்து வந்த பாதை குறித்தும் அரசியல் ஆர்வம் குறித்தும் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பிகா.
View this post on Instagram
அதில் "நான் என்னுடைய துறையை நேசிக்கிறேன். அது திரைப்படமாக இருந்தாலும் சரி , டிவி சீரியல்களாக இருந்தாலும் சரி.நான் ஹீரோயினா நடிக்கும் பொழுது எல்லா விதமான ஷேடும் இருக்குற மாதிரியான ரோல்ஸ் பண்ணியாச்சு. எனக்கு காமெடி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் . நான் சகலகலா வல்லவன் , படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நான் காமெடி ரோலில் நடித்திருந்தாலும் , அது ஹீரோயின் ரோலோடு இணைந்து வருவதாக இருந்தது. தனி கமெடி நடிகையாக பண்ணனும். கமல்- அம்பிகா ஜோடினு சொல்லும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். மலையாள சினிமாவுல இருந்து பரிந்துரை செய்து தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தவர் கமல் சார்தான்.
View this post on Instagram
எனக்கு அரசியல் ஆசை இருக்கு. ஆனால் எப்போ வருவேன்னு தெரியாது. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது. எனக்கு இரண்டு நடிகர்களோட நடிக்க முடியலைனு வருத்தம் .மலையாளத்துல மது சார் , தமிழ்ல எம்.ஜி.ஆர் இவங்க ரெண்டு பேர் கூட நடிக்கலைனு ஃபீல் பண்ணியிருக்கேன். “ என ஓபன் அப் செய்திருக்கிறார் அம்பிகா.