Aishwarya Lekshmi: “குழந்தை மாதிரி அழுதேன்”.. காதல் தி கோர் படம் பார்த்து நெகிழ்ந்த நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி
மம்மூட்டி நடித்துள்ள காதல் தி கோர் படத்தை பார்த்த நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி ஒரு குழந்தையைப் போல் அழுததாக பதிவிட்டுள்ளார்
காதல் தி கோர்
மம்முட்டி ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் திரைப்படம் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கிய ஜியோ பேபி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டி கம்பெனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ஒருபாலீர்பாளராக மம்முட்டி
காதல் தி கோர் படத்தில் நடிகர் மம்முட்டி ஒருபாலீர்ப்புக் கொண்டவராக நடித்துள்ளார். இந்த உண்மையை வெளியே சொல்லத் தயங்கி ஒரு திருமணம் செய்து அதில் 20 ஆண்டுகாலம் குடும்ப வாழ்க்கையைக் கடந்து விடுகிறார் மம்முட்டி. வார்டு தேர்தலில் மம்முட்டி போட்டியிட இருக்கையில் அவரது மனைவியான ஜோதிகா அவர் மீது தன்னிடம் உண்மையை மறைத்து குடும்பம் நடத்தியதற்காக அவரிடம் விவாகரத்து கேட்கிறார்.
இதனால் பெரும் சர்ச்சை ஏற்படுகிறது. சமூக அழுத்தங்களுக்கு பயந்து ஒருவர் தன்னுடைய பாலீர்ப்பை வெளிப்படுத்தாமல் இருப்பதும் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்குமான நியாயத்தை பேசும் வகையில் இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஒரு சூப்பர்ஸ்டாரான மம்முட்டி இந்தப் படத்தில் அவர் தேர்வு செய்துள்ள கதாபாத்திரத்திற்காக பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.
சமந்தா பாராட்டு
காதல் தி கோர் படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் இந்தப் படத்தையும் மம்முட்டி ஜோதிகா உள்ளிட்டவர்களையும் பாராட்டி வருகிறார்கல். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தைப் பாராட்டி இருந்தார் மேலும் மம்முட்டியை தன்னுடைய ஹீரோ என்றும் அவர் கூறியிருந்தார்.
குழந்தையைப் போல் அழுதேன்
.@mammukka you continue to amaze, i felt the pain, the loneliness, the fear ,the weight of the decisions you had to take and every single look tugged at my heart. Best part of the movie for me was that "Ente daivame" in the second half.
— Aishwarya Lekshmi (@aishwaryaleksh7) November 26, 2023
Cried like a baby in the theatre. pic.twitter.com/5JCDwr5va0
சமந்தாவைத் தொடர்ந்து தற்போது நடிகை ஐஷ்வர்யா லக்ஷ்மி காதல் தி கோர் படத்தை பாராட்டியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி , ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஷ்வர்யா லட்சுமி தான் இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்த்து குழந்தையைப் போல் அழுததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் மம்முட்டியின் கதாபாத்திரம் மனதில் எதிர்கொண்ட கேள்விகள் , அழுத்தங்கள் எல்லாவற்றையும் தான் உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார் படத்தில் மம்முட்டி பேசும் ‘ எண்டே தெய்வமே’ என்கிற வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.