Nazriya: நடிகை நஸ்ரியா வெளியிட்ட ஷாக் அறிவிப்பு: சோகத்தில் ரசிகர்கள்
நடிகை நஸ்ரியா சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் என்ன சொல்லி இருக்காருனு பாருங்க...
நடிகை நஸ்ரியா சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பளுங்கு திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. அதனை அடுத்து வெளியான பிராமணி, ஒரு நாள் வரும் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களிலும் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்பத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நஸ்ரியா ஏராளமான இளம் ரசிகர்களை பெற்றார். இவரின் க்யூட் புன்னகையும், இன்னசண்ட் முகமும், குறும்புத்தனமான நடிப்பும் தமிழ் இளைஞர்களை கொண்டாட வைத்தது.
அதே ஆண்டில், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்தார் நஸ்ரியா. இதில் ராஜா ராணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நடிகைகள் என்றாலே கவர்ச்சி காட்டி தான் ஆக வேண்டும் என்ற ஒரு பிம்பம் சினிமா உலகில் உள்ளது. இப்படி ஒரு சூழலில் கவர்ச்சி காட்டாமலும் ரசிகர்கள் மனதை வெல்ல முடியும் என்று நிரூபித்துள்ள நிஜ அழகி நஸ்ரியா என்றால் அது மிகையல்ல.
நஸ்ரியா மலையாளத்தில் நடித்த பெங்களூர் டேஸ் திரைப்படமும் மலையாளம் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்ட போது, நஸ்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். ஆனால் அவை ரசிகர்கள் மத்தியில் போதிய அளவு வரவேற்பை பெற முடியவில்லை. நஸ்ரியாவின் குறும்புத்தனமான நடிப்பை ஸ்ரீ திவ்யாவால் ஈடுகட்ட முடியாததே படத்தில் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.
நஸ்ரியாவின் பதிவு
இப்படி மலையாளம் மட்டுமல்லாம் தமிழிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகை நஸ்ரியா இஸ்டாவில் செய்துள்ள போஸ்ட் ஒன்றில் தான் சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார். மேலும், உங்களின் அன்பை மிஸ் பன்னுவேன் என்றும் நிச்சயம் சமூக வலைதளத்திற்கு விரைவில் திரும்புவேன் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் நஸ்ரியாவின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருந்த போதிலும் நஸ்ரியா சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் திரும்பி வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க