மேலும் அறிய

Casting Association : "நேர்மையும் உழைப்பும் என்றும் தோற்பதில்லை" - நடிகர் சங்க வெற்றி குறித்து விஷால்!

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷாலும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டனர். 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்கு உறுப்பினர்கள் முறையாக அழைக்கப்படவில்லை மற்றும் தேர்தலை அனைத்து இடங்களிலும் நடத்தாமல் சென்னையில் மட்டும் நடத்தியதாக கூறி இதை ரத்து செய்ய வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். இந்த வழக்கில் 2020ஆம் அவர் தீர்ப்பளித்தார். அதில், 2019ஆம் ஆண்டு நடைபெற்று தேர்தலை ரத்து செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து,  மூன்று மாதத்தில் நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதையடுத்து, இந்தத் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல் முறையீட்டு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது, “கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கபட்டு அதற்கான வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில், நடிகர் சங்கத் தேர்தலில் பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷாலும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டனர். 

Casting Association :

இந்தநிலையில், தென்னிந்திய நடிகர் சங்க வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :  வரலாற்றில் என்றுமே 'நேர்மையும் உழைப்பும் தோற்பதில்லை' என்று கூறுகிறது. நான் உட்பட "பாண்டவர் அணி" முழு அணியையும் 'பொதுச் செயலாளராக' தேர்வு செய்த தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் (SIAA) நடிகர்சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு நீண்ட இழுபறி போர் ஆனால் இறுதியாக உண்மையே வெற்றி பெற்றது. நான் எப்போதும் நீதியை நம்புகிறேன், நியாயமான தேர்தலை நடத்திய நீதித்துறை அமைப்புக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Casting Association :

அதிக பொறுப்புகள் இருக்கிறது. அதை நேர்மை மற்றும் அதிக உழைப்பின் மூலம் ஒவ்வொன்றையும் ஒரே மாதிரியாக நிறைவேற்றுவோம். தேர்தல் பணியை சுமூகமாக நடத்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், ஊடகத்துறையினர், காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.

எனது பாண்டவர் அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நமது நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்கவும், அதை முடிக்கவும் எங்கள் கனவை என்றென்றும் நிறைவேற்றவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget