மேலும் அறிய

Vishal Birthday: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்.. பிறந்த நாளில் குழந்தைகளை தேடி சென்ற விஷால்..!

கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுடன் நடிகர் விஷால் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுடன் நடிகர் விஷால் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், சண்டைக்கோழி படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். தனக்கு ஆக்‌ஷன் படமே செட் ஆகும் என நினைத்த விஷால், திமிரு, பாண்டிய நாடு, மருது, துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து சூப்பட் ஹிட் கொடுத்தார்.  தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பிளே பாயாக இருந்த விஷால், பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் பெண் சுபாவம் கொண்ட முற்றிலும் வேறொரு கேரக்டராக மாறி ரசிகர்களை கவர்ந்தார். 

பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஆக்‌ஷன் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நடிகர், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் தற்போது இயக்குநராக விஷால் மாறியுள்ளார். துப்பறிவாளன் 2 தவிர, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்துள்ளார். 

இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஷாலுக்கு ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும், நண்பர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஷால் தனது பிறந்த நாளை கருணை இல்லத்தில் கொண்டாடியுள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு சென்ற விஷால், அங்கிருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அங்குள்ள குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டிய விஷால் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்துள்ளார். 

இதேபோல் விஷாலின் மக்கள் நல இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

மேலும் படிக்க: Jason Sanjay: தந்தை வழி அல்லாமல் தாத்தா வழி செல்லும் தளபதி மகன்: விஷயம் இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget