மேலும் அறிய

HBD Vineeth Radhakrishnan: நண்பனாக நடிக்க போன இடத்தில் ஹீரோவான வினீத்... அவரின் 54வது பிறந்தநாள் இன்று..!

HBD Vineeth Radhakrishnan : முதல் படத்திலேயே மாலிவுட் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு பெற்று அடுத்த படமே ஹீரோ சான்ஸ் கிடைத்து பிஸியான நடிகரானார்.

1992ம் ஆண்டு வெளியான 'ஆவாரம் பூ' திரைப்படத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினீத் ராதாகிருஷ்ணன். வினீத் ஒரு திறமையான நடிகர் மட்டுமின்றி ஒரு தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர். 

முதல் வாய்ப்பு : 

கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் 1969ம் ஆண்டு பிறந்த வினீத் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் தமிழ் மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது ஆறு வயது முதல் பரதநாட்டியம் பயின்றவர். அவருடைய குருவான கலாமண்டலம் சரஸ்வதியின் கணவர் வாசுதேவன் மூலம் 1985ம் ஆண்டு வெளியான  'இடநிலங்கள்' படத்தில் அறிமுகமானார். அதன் மூலம் முதல் படத்திலேயே மாலிவுட் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு அமைந்தது. அப்படத்தில் சின்ன ரோல் என்றாலும் மிகவும் முக்கியமான ரோலில் நடித்ததால் அடுத்த படமே ஹீரோ சான்ஸ். 

HBD Vineeth Radhakrishnan: நண்பனாக நடிக்க போன இடத்தில் ஹீரோவான வினீத்... அவரின் 54வது பிறந்தநாள் இன்று..!

ஆவாரம்பூ ஹீரோ :

இப்படி மலையாளத்தில் மிகவும் பிஸியான நடிகராக வாய்ப்புகள் குவியும் சமயத்தில் தான் தமிழில் 'ஆவாரம் பூ' படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்று சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதையும் கைப்பற்றினார். முதலில் அப்படத்தில் ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க தான் அழைப்பு வந்துள்ளது. ஆனால் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டு அப்படத்தின் ஹீரோவானார். மிக பெரிய வெற்றி படமாக அமைந்த அப்படத்தில்  வினீத் நடிப்பை பார்த்த கே. பாலச்சந்தர் வினீத்தை போன் மூலம் தொடர்பு  கொண்டு 'நல்லா நடிச்சு இருந்த' என பாராட்டி தன்னுடைய 'ஜாதி மல்லி' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். 

ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல்:

அடுத்தடுத்து ஜென்டில்மேன், வேதம் என அடுத்தடுத்து வாய்ப்புகள்  குவிய வினீத்துக்கு மிக பெரிய ரீச் கொடுத்த திரைப்படம் 'மே மாதம்' மற்றும் 'காதல் தேசம்'. அப்படம் வெளியான சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காக இருந்தது வினீத் ஹேர் ஸ்டைல். தமிழ், மலையாளம் படங்களை போலவே தெலுங்கிலும் பிஸியான நடிகரானார் வினீத். 

HBD Vineeth Radhakrishnan: நண்பனாக நடிக்க போன இடத்தில் ஹீரோவான வினீத்... அவரின் 54வது பிறந்தநாள் இன்று..!

சூப்பர்ஸ்டாருடன் சந்திரமுகி : 

'சந்திரமுகி' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகாவுடன்  நடிக்க வாய்ப்பு பெற்றதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 'ரா ரா சரசுக்கு ரா ரா...' பாடல் அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது. அவரின் திரை பயணத்தில் ஒரு முக்கியமான படமாக சந்திரமுகி அமைந்தது. 

மனைவி மகளுடன் சென்னையில் வசிக்கும் நடிகர் வினீத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். எட்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'சர்வம் தாள மாயம்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். வினீத் மனைவி சென்னையில் ஒரு பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
"சிஸ்டம்" படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்ற நடிகை ஜோதிகா!
'முதலமைச்சர் விஜய்' மாஸான டைட்டில் கார்டுடன் வெளியாகும் ஜனநாயகன்
'முதலமைச்சர் விஜய்' மாஸான டைட்டில் கார்டுடன் வெளியாகும் ஜனநாயகன்
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?
பொண்டாட்டியுடன் மல்லுகட்டும் புருஷன்! நாளை ரிலீசாகிறது கட்டா குஸ்தி 2 - கொடி கட்டுமா குஸ்தி?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
Hyundai Creta EV: மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
மக்களே.! ஹூண்டாய் கிரெட்டா EV வாங்க அருமையான வாய்ப்பு; இப்போ விலை ரூ.10.99 லட்சம் தான்; எப்படி.?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
Embed widget