மேலும் அறிய

'முதலமைச்சர் விஜய்' மாஸான டைட்டில் கார்டுடன் வெளியாகும் ஜனநாயகன்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது

ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் பல மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிடுவதற்கு சாரியான தேதி குறித்து படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஜனநாயகன் படத்தில் முதல்வர் விஜய் என்கிற டைட்டில் கார்டு இடம்பெற்றிருக்கும் தகவலும் உறுதியாகியுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிழ் வழங்க ஆட்சேபனை தெரிவித்தது. சட்டமன்ற தேர்தலுக்காக விஜய் திவிர பிரச்சாரத்தில் இருந்த அதே நேரம் அவரது கடைசி படம் ரிலீஸூக்கு சிரமப்பட்டு பல மாதங்கள் கிடப்பில் கிடந்தது. இப்படத்தை மிக எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருந்தாலும் தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக அமைந்து ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் மறந்தே போயினர். அதே நேரம் ஜனநாயகன் படத்தை நம்பியிருந்த திரையரங்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஏமாற்றமடைந்தார்கள். 

ஜனநாயகன் ரிலீஸ் தேதி

9 உறுப்பினர்களைக் கொண்ட தணிக்கைக் குழு ஜூன் 30 அன்று இப்படத்தைப் பார்த்தது; 'A' சான்றிதழ் வழங்குவதாகவும் ஆனால் பல இடங்களில் வார்த்தைகளை ம்யூட் செய்யவும்., சில காட்சிகளை வெட்டவும்  பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, பிரியாமணியின் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியாக வேண்டும் என தணிக்கை குழு பரிந்துரைத்துள்ளது. 

தற்போது இப்படத்தை வெளியிடும் தேதியை முடிவு செய்ய படக்குழு விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. விநியோகஸ்தர்கள் ஜூலை 23ஆம் தேதியும், ஓடிடி  நிறுவனங்கள் ஜூலை 16ஆம் தேதியும் படத்தை வெளியிட வேண்டும் என்று கோருகின்றன. இது குறித்துத் தயாரிப்பு நிறுவனம் இறுதி முடிவை எடுக்கும்.

'முதல்வர் விஜய்' டைட்டில் கார்ட்

ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தபோதே இப்படத்தை பலர் தங்களது செல்ஃபோனில் தரவிறக்கி பார்த்துவிட்டனர். இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். இதனால் லேட்டாக ரிலீஸ் ஆனாலும் படம் நல்ல வசூலை ஈட்டித்தரும் என அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளார்கள். ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அவர்கள் எதிர்பார்த்தது போலவே 'முதல்வர் விஜய்' என்கிற டைட்டில் கார்டுடன் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது . 

Advertisement

தலைப்பு செய்திகள்

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Embed widget