மேலும் அறிய

Varisu vs Thunivu: "துணிவு படமும் பொங்கலுக்கு வருது"... ஷியாமுக்கு நடிகர் விஜய் கூறிய பதில் என்ன தெரியுமா..?

நடிகர் விஜயின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வாரிசு படத்தில் நடிகர் ஷியாமும் நடித்துள்ளார்.

நடிகர் விஜயின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வாரிசு படத்தில் நடிகர் ஷியாமும் நடித்துள்ளார்.

இவர் தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜயுடன் துணிவு படம் குறித்து பேசியதை ஷியாம் பகிர்ந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
"விஜய் அண்ணா... துணிவும் பொங்கலுக்கு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்கன்னு சொன்னேன்." அதற்கு அவர், "ஹே ஜாலிப்பா... வரட்டும். அவரும் நம்ம நண்பர்தானே. இந்தப் படமும் நல்லா போகட்டும். நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் அண்ணா கூறினார்.

இதுமாதிரியான எண்ணம் தான் அவரை தளபதியாக்கியது என்று ஷியாம் தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விஜய் பாடிய  ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.

மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப்பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில், கடந்த 4 ஆம் தேதி, அதாவது நேற்றைய தினம்   'தீ தளபதி' பாடல் வெளியாகும் என்றும் இந்த பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அதன் படி நேற்று மாலை 4 ஆம் தேதி இப்பாடல் வெளியானது.

இதேபோல், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததையடுத்து டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று அதுவும் நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget