Vijay Sethupathi : சர்வதேச விருதுகளை வென்ற ’கேங்’ படம்... ட்விட்டரில் போஸ்டர் வெளியிட்ட விஜய் சேதுபதி..
பெண்களுக்கு நிகழும் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இப்படம் இருக்கும் என்று இயக்குநர் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விருதுகளைப் பெற்ற ' Gang' - கேங் படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நான்கு சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றுள்ள இந்தத் திரைப்படம், இயக்குனர் தீனதயாளனின் முதல் படமாகும்.
சாட்டை அன்பழகனின் உதவி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார். தீரன், இரும்புத்திரை, கே.டி, காளி, தமிழ் படம் 2, ஹீரோ, விக்ரம், சமீபத்தில் வெளியான "THUGS" ஆகிய திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள வளர்ந்து வரும் நடிகரான குணா ஹீரோவாக நடித்துள்ளார்.
Happy to launch the FIRST LOOK Poster of #GANG.
— VijaySethupathi (@VijaySethuOffl) February 24, 2023
Congrats to @dayalangg, @Gunatheartist, and Team.@Vrcreationsfilm @DaveDamini @ProCNKumar @ActionJe @prumal4060 @EditorMadhavan @GetinDream @Tonycomposer @SenthamizhanAM @manitalkin @Sreeram_bala pic.twitter.com/hM0s2wFohh
மும்பையைச் சேர்ந்த தாமினி தேவ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். டோனி பிரிட்டோ இப்படத்துக்கு இசையமைக்கிறார். தில்லுக்கு துட்டு 2, இடியட் படங்களில் பணியாற்றிய செஞ்சி மாதவன் படத்தொகுப்பு செய்கிறார். பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், பெண்களுக்கு நிகழும் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இப்படம் இருக்கும் என்று இயக்குனர் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.