சம்பள பாக்கி இருக்கு...எனக்கு ஏன் இத பண்றீங்க...சிரித்துகொண்டே கோபத்தை காட்டிய விஜய் சேதுபதி
கவின் ஆண்ட்ரியா நடித்துள்ள மாஸ்க் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி சிரித்துக்கொண்டே பேசி பலரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்

வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் நடித்துள்ள படம் மாஸ்க். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் , நெல்சன் , நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி பேசிய விதம் ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
எனக்கு சம்பள பாக்கி இருக்கு
" இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். படத்தின் இயக்குநர் விக்ரணன் சிறப்பாக பேசினார். படத்திற்கு அவர்தான் மெண்டர் என்று நினைத்தேன் ஆனால் மேடை பேச்சிற்கும் அவர் தான் மெண்டர் போல் பேசினீர்கள். வெற்றிமாறன் நீங்கள் ஒரு நல்ல மெண்டர். நான் படம் பண்ணாலும் எனக்கும் மெண்டர் ஆகிடுங்க சார். நான் நிஜமாகவே ஊருக்கு போகனும் பொய் சொல்லவில்லை. இங்கு இருக்கும் எல்லார் மேலயும் சத்தியமாக சொல்றேன். இந்த படத்தின் டிரைலர் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. விடுதலை படத்தின் படப்பிடிப்பின் போது வெற்றிமாறன் மாஸ்க் படத்தின் பற்றி சொன்னார். கவினை ஸ்கிரினில் பார்க்க ரொம்ப பிடித்திருந்தது. கவின் ரொம்ப வசீகரமாக இருக்கீங்க கவின். நெல்சன் சொன்னது போல் இன்னைக்கு நாம் வேவ்வேறு கதைகளை தேர்வு செய்யும் போது அது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இன்னைக்கு வாங்கு அடி தான் பின்னால் எவன் அடித்தாலும் தாங்க முடியும். " இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவுக்கும் சொக்கலிங்கத்திற்கும் இந்த படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும். ஏழு நாட்கள் என்னிடம் வேலை வாங்கியிருக்கிறார்கள். ஏதாவது பார்த்து செய்யுங்கள். எனக்கு சம்பள பாக்கி இருக்கு ' என விஜய் சேதுபதி பேசினார்.
ஆண்ட்ரியா பற்றி விஜய் சேதுபதி
நடிகை ஆண்ட்ரியா பற்றி பேசிய விஜய் சேதுபதி " நான் முதல் முறையாக ஆண்ட்ரியாவை பார்த்தபோது யார்ரா இந்த பொண்ணு என்று பார்த்தேன் இப்போதும் அப்படி தான் பார்க்கிறேன். நாளைக்கு என் மகனும் அப்படிதான் பார்ப்பான் என்று நினைக்கிறேன். வடசென்னை படத்தில் நடித்த சந்திரா மாதிரியே இப்போதும் இருக்கிறீர்கள். வீட்டிற்கு போய் பெட்ல படுப்பீங்களா இல்ல ஃபிரிட்ஜ்ல படுப்பீங்களா" என்றார்
ஏன் எனக்கு அதை பண்றீங்க
"ஜிவி சார் இதுவரைக்கும் நான் எந்த படம் கேட்டாலும் பண்றேனு ஒத்துகிட்டதே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் என்னை கூப்பிடுங்க என்று சொல்வார். அது ஏன் எனக்கு அதை பண்றீங்கனு தெரியல. மேடையேறி சொன்னால் என் படத்திற்கு இசையமைப்பீர்கள் என்பதால் தான் இதை சொல்கிறேன்" என விஜய் சேதுபதி பேசினார் .





















