விஜய் பேச்சுக்கு மரண வெயிட்டிங்.. டிசம்பர் 24 ல் ‘வாரிசு’ ஆடியோ லான்ச்?..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
நடிகர் விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்கல் 2023 அன்று வெளியாகவுள்ள 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 24ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் "வாரிசு" திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த முழு நீள ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இதில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. எஸ். தமன் இசையமைப்பில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே...' பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் -1ல் இருந்து வருகிறது. நடிகர் விஜய்யின் தெறிக்க விடும் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னையில் நடைபெறவுள்ளது 'வாரிசு' ஆடியோ லான்ச் :
அந்த வகையில் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது எனும் தகவல் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இதே இடத்தில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#Varisu Audio Launch on Dec 24th at Nehru indoor Stadium Chennai. Get Ready for Thalapathy Vijay's Kutty Story! 😉🤗♥️ pic.twitter.com/BYlyHCT8hC
— #Varisu (@VarisuMovieOff) November 11, 2022
நேரடியாக மோதும் அஜித் - விஜய் :
வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் அதே நாளில் நாள் நடிகர் அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படமும் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் மிகவும் பரபரப்பாகவும் எதிர்பார்ப்போடும் இருக்கிறார்கள் திரை ரசிகர்கள்.
Only Thunivu & Varisu Will Be Screened In All The 1200 Screens In Tamilnadu For This Pongal !! #Thunivu - 700 Screens #Varisu - 500 Screens
— Kwood Gangster :-) (@KWood_Gangster) November 11, 2022
- Tirupur Subramaniam pic.twitter.com/3WbWxaL2Gf
வாரிசு திரைப்படம் 400 திரைகளிலும் , துணிவு திரைப்படம் 700 திரைகளிலும் திரையிடப்படும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இந்த மாஸ் ஹீரோக்களின் திரைப்படம் தமிழகமெங்கும் இருக்கும் 1200 திரைகளை இந்த பொங்கலுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.