Vijay : சண்டக்கோழி வேண்டாம் என்ற விஜய்..முரட்டுக்காளையில் ரஜினியின் பெருந்தன்மை...ரெண்டுக்கும் இதுதான் சம்பந்தம்
ஒரே பிரச்சனையை ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவர் எப்படி கையாண்டார்கள் என்பதைப் பார்க்கலாம்
சண்டக்கோழி படத்தை விஜய் ஏன் நிராகரித்தார்?
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. ராஜ்கிரண் மற்றும் விஷால் கூட்டணியில் உருவான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் சொன்னதாக இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருந்தார். ”சண்டக்கோழி படத்தின் முதல் பாதி கதையை விஜஜ்யிடம் சொல்லி முடித்ததும், விஜய் என்னை அப்படியே நிறுத்தி ”செகண்ட் ஹாஃப் கேட்கப்போவதில்லை” என்றார்.
ஏன்? என்று கேட்டதற்கு இரண்டாவது பாதியில் ராஜ்கிரண் கேரக்டர் இருக்கும்போது நான் அங்கு செய்ய என்ன இருக்கிறது? என்று இந்த கதையை நிராகரித்துவிட்டார்” என்று லிங்குசாமி தெரிவித்தார்.
முரட்டுக்காளை படத்தில் ரஜினி
View this post on Instagram
இயக்குநர் எஸ்.பி முத்துராமன் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார். ”முரட்டுக்காளை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெய்சங்கரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். ஜெய்சங்கரிடம் இது குறித்து பேசியபோது அவர் பஞ்சு அருணாச்சலம் மற்றும் எஸ்.பி முத்துராமன் அண்ணன் சொல்லிவிட்டால் எனக்கு ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்று தான் அர்த்தம்.
கண்டிப்பாக நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். ஜெய்சங்கர் தான் வில்லனாக நடிக்கப்போகிறார் என்று சொன்னதும் ரஜினிகாந்த் என்னிடம், இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவு முக்கியத்துவம் அவருக்கும் கொடுக்க வேண்டும் . அவ்வளவு பெரிய நடிகரை என் படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க வைக்கக்கூடாது . போஸ்டர் கட் அவுட் வரும்போது கூட எங்கள் இருவரின் ஃபோட்டோவையும் ஒரே அளவில்தான் போட வேண்டும் . என்னுடைய ஃபோட்டோவை மட்டும் பெரிதாக போட்டு அவருடையதை சின்னதாக போடக்கூடாது என்று ரஜினி சொன்னார்” என்று எஸ். பி முத்துராமன் கூறியுள்ளார்.
ஒரே மாதிரியான பிரச்சனைகளை இரண்டு ஸ்டார் நடிகர்களை எப்படி கையாண்டுள்ளார்கள் என்பதில் இருக்கும் வித்தியாசத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ”தி கோட்” படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்