மேலும் அறிய

Vijay: செய்தி சேனல் தொடங்கும் நடிகர் விஜய்? வைரலாகும் தகவல்- விஜய் தரப்பு விளக்கம் என்ன?

அரசியலுக்கு வருவதற்காக செய்தி சேனலை வாங்க விஜய் திட்டமிட்டாரா... திடீரென பரவிய தகவலால் பரபரப்பு

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக புதிதாக செய்தி சேனல் வாங்க உள்ளதாக வதந்தி பரவியது. 

விஜய் நடித்த லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக லியோவின் நான் ரெடிதான் பாடலும், படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. படத்தின் ரிலீசை ஒட்டி சென்னையில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பங்கேற்பார் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்து கொண்ட விஜய், சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ஒவ்வொரு தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளையும் விஜய் சந்தித்தது, சினிமாவிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முன்னதாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி ஊக்கத்தொகை அளித்த விஜய், தனது ரசிகர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் இரவு நேர பாடசாலை தொடங்கியுள்ளார். விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு அரசியலை நோக்கி இருப்பதாகவும், தன்னை முழுவதுமாக அரசியலில் ஈடுபடுத்தி கொள்ள விஜய் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

லியோ படத்தை முடித்த விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது விஜய் வெளிநாட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கும் சூழலில் நடிகர் விஜய், செய்தி சேனலை விலைக்கு வாங்க உள்ளதாக தகவல்கள் பரவின. அரசியல் பயணத்திற்காக செய்தி சேனலை விலைக்கு வாங்க விரும்புவதாக பரவிய செய்திக்கு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த சூழலில் விஜய் செய்தி சேனலை விலைக்கு வாங்குவதாக பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என விஜய் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. எனினும், விஜய்யை சுற்றி நடக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கு அவரால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஒருசிலர் கருத்து கூறி வருகிறனர்.

இதற்கிடையே சினிமா பிரபலங்களும் அரசியலுக்கு வரும் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க: Fahadh Faasil: ரஜினிக்கு வில்லனான ‘ரத்னவேலு’ ஃபஹத்...சம்பளம் இத்தனை கோடிகளா....அதிர்ச்சியில் கோலிவுட்!

Actor Vijay: விமான நிலையத்தில் ‘தளபதி’ விஜய்.. வைரலாகும் புகைப்படம்.. எங்கே சென்றார் தெரியுமா?

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Embed widget