Actor Vijay: போஸ்டர்.. மீம்ஸ்.. இயக்க உறுப்பினர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட நடிகர் விஜய்!!
விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு நடிகை விஜய் சார்பில் எச்சரிக்கை என்று விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய் சார்பில் தற்போது அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது நம் தளபதி விஜய் அவர்களின், கடுமையான உத்தரவின் பேரில், ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
Thalapathy @actorvijay Sir @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/zuw6SOq8qZ
— Bussy Anand (@BussyAnand) April 6, 2022
இருப்பினும், நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால், இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#ThalapathyVijay Meets #Mkstalin pic.twitter.com/41xdmannfL
— S.Kalyani Pandiyan (@Kalyaniabp) April 6, 2022
முன்னதாக நேற்று நடிகர் விஜயும், முதல்வர் ஸ்டாலினும் திருமண நிகழ்வில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலானது. ’தளபதியும் தளபதியும் சந்திப்பு’ என பலரும் அதனை பதிவிட்டு கொண்டாடிய நிலையில் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பை மேற்கோள் காட்டி கிண்டல் பதிவுகளையும், அரசியல் நோக்க பதிவுகளையும் சோஷியல் மீடியாவில் பதிவு செய்தனர். இது விஜய் தரப்பு பார்வைக்கு செல்லவே உடனடியாக அறிக்கை பறந்துள்ளது.
மேலும் விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் வெளியவரவுள்ள சூழலில் சக நடிகர்களை கிண்டல் செய்தும், மீம்ஸ்கள் பதிவிட்டும் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்