விடிய விடிய குடித்த ரஜினி ஜெய்சங்கர்...அடுத்த நாள் செட்டில் நடந்த சம்பவம்...தகவல் பகிர்ந்த பிரபலம்
படிக்காதவன் படத்தின் போது ரஜினிகாந்த் மற்றும் ஜெய்ஷங்கர் பற்றிய அனுபவம் ஒன்றை நடிகர் விஜய் பாபு பகிர்ந்துகொண்டுள்ளார்.

விடிய விடிய குடித்த ரஜினி ஜெய்சங்கர்
நடிகர் ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை நடிகர் விஜய் பாபு பகிர்ந்துகொண்டுள்ளார். இயக்குநர் ராஜசேகர் இயக்கிய படிக்காதவன் படத்தில் ரஜினியின் சகோதரனாக நடித்தார் விஜய் பாபு.
" படிக்காதவன் படத்தில் ரஜினியின் சகோதரராக முதலில் வேறு ஒருவர் நடிக்க இருந்தது. ராஜசேகரன் இயக்கிய பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். கடைசி நேரத்தில் அந்த நடிகர் நடிக்க முடியாததால் எனக்கு அந்த படம் வாய்ப்பு வந்தது. நான் ரஜினிக்கு முன்பே சினிமாவிற்கு வந்தவன். திரைப்பட கல்லூரி நாட்களிலேயே எனக்கு அவர் பழக்கம். ஆனால் இடைப்பட்ட 7 ஆண்டுகளில் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை படப்பிடிப்பிற்கு முன்பு ரஜினியை ஒருமுறை சென்று பார்த்துவர சொன்னார் ராஜசேகர். அப்போது ரஜினி ராகவேந்திரா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். என்னைப் பார்த்ததும் அவரே எழுந்து வந்துவிட்டு குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரித்தார். நல்ல கதாபாத்திரம் படப்பிடிப்பில் சந்திப்போம் என்று சொன்னார் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பியரை 5 பேர் பங்குபோட்டுக் கொண்ட அதே ரஜினியாக அவர் இருந்தார். எந்த மாற்றமும் அவரிடம் இல்லை.
படிக்காதவன் படப்பிடிப்பு போரூர் தாண்டி கோவூரில் நடந்தது. ஜெய்சங்கர் எப்போதும் மதியம் 2 மணிக்கு தான் வருவார். அப்போது அங்கிருந்த ரஜினியைப் பார்த்து ராஜசேகரிடம் 'இவன் எத்தனை மணிக்கு வந்தான்' என கேட்டார் . ரஜினி காலையில் ஏழரை மணிக்கு வந்ததாக ராஜசேகர் சொன்னார். ரஜினி எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஏன் கேட்குறீங்க என ஜெய்சங்கரிடம் ராஜசேகர் கேட்டார். ' இல்ல காலைல 5 மணி வரையும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் தண்ணி அடிச்சிட்டு இருந்தோம்' என ஜெய்சங்கர் கூறினார். ரஜினியின் வளர்ச்சி சாதாரணமானது இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்தாலும் செட்டில் நேரத்திற்கு வந்து விடுவார்" என விஜய் பாபு ரஜினியைப் பற்றி பேசியுள்ளார்.
படிக்காதவன் ஷூட்டிங்கிற்கு ஜெய்சங்கர் மதியம் இரண்டு மணிக்கு வருகிறார்.
— MGR ரஜினி அஜித் (@MgrVeriyan) June 24, 2025
ஜெய்சங்கர், டைரக்டர் ராஜசேகரிடம், ரஜினியை கை காண்பித்து, இவன் எத்தனை மணிக்கு வந்தான் என்று கேட்டார்.
ராஜசேகர், ஏழரை மணிக்கு வந்தார், ஏன் கேக்குறீங்க என்று கேட்க
அதற்கு ஜெய்சங்கர், இல்ல, இன்னைக்கு காலையில… pic.twitter.com/GiPd2MuutM





















