மேலும் அறிய

Vijay Antony: ”எனது குடும்பத்தை நினைத்து பயப்படுவேன்“ - வைரலாகும் விஜய் ஆண்டனியின் பேச்சு

”எனக்கு எதாவது நடந்து இறந்து விட்டால் என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள் என்ற பயம் இருக்கும். நான் இருந்தால் எல்லாரையும் பார்த்து கொள்வேன்” என்று விஜய் ஆண்டனி பேசியது வைரலாகி வருகிறது.

நான் இல்லை என்றால் என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள் என்ற பயம் இருப்பதாக முன்பு விஜய் ஆண்டனி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. 

குடும்பத்தை பற்றி கவலை:

நடிகரும், இயக்குநருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு விரைந்த திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன அழுத்தத்தின் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைபிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வகையில், முன்பு ஊடகம் ஒன்றிற்கு விஜய் ஆண்டனி அளித்திருந்த பேட்டி ஒன்றி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தை நினைத்து பயப்படுவதாக விஜய் ஆண்டனி பேசுவதை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறது. ”என்னை பற்றி நான் பயப்படமாட்டேன். சில படங்களுக்காக ரிஸ்க் எடுக்கும்போது என்கும்பத்தை பற்றி பயப்படுவேன். எனக்கு எதாவது நடந்து இறந்து விட்டால் என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள் என்ற பயம் இருக்கும். நான் இருந்தால் எல்லாரையும் பார்த்து கொள்வேன். நான் இல்லை என்றால் என் குடும்பத்தை பற்றிய கவலை ஏற்படும். என்னை பற்றி கவலைப்பட்டது இல்லை” என பேசியுள்ளார். 

பெரும் துயரம்:

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த போது பாடல் காட்சிகள் லங்காவி தீவில் படமாக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட விஜய் ஆண்டனி சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் விபத்து ஏற்பட்டு மரணத்தை சந்தித்து மீண்டு விஜய் ஆண்டனிக்கு மற்றுமொரு பேரிடியாய் மகளின் தற்கொலை ஏற்பட்டுள்ளது. மகளின் இழல்லை அவர் எவ்வாறு தாங்கிகொள்வார் என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

முன்னதாக தற்கொலை குறித்து, தனக்கு 7 வயதாக இருக்கும் போது தனது தந்தை தற்கொலை செய்து கொண்டதால் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்தும் விஜய் ஆண்டனி பேசியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

மேலும் படிக்க: Vijay Antony: ”விஜய் ஆண்டனியை பார்க்கவே பயமா இருக்கு...எப்படி தாங்கிக்கொள்வாரோ?” : உருகிய தயாரிப்பாளர்

Vijay Antony: அன்று அப்பா.. இன்று மகள்.. சோகங்கள் நிறைந்த விஜய் ஆண்டனியின் வாழ்க்கை.. வைரலாகும் வீடியோ..

 

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Embed widget