மேலும் அறிய

"நான் அவன் இல்லை" விஜய் மில்டனுக்கு விஜய் ஆண்டனி பரபரப்பு விளக்கம் - நடந்தது என்ன?

மழை பிடிக்காத மனிதன் படத்தில் முதலில் வரும் 2 நிமிட காட்சியை சேர்த்தது தான் இல்லை என்று நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த 2ம் தேதி வெளியானது. படம் வெளியான தினத்தில் பரபரப்பான பேட்டி ஒன்றை அந்த படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அளித்தார்.

அதில், படத்தின் முதல் நிமிடத்தில் வரும் காட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது படத்தில் எப்படி இணைக்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் ஆண்டனி விளக்கம்:

இதையடுத்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை தயாரிப்பாளர் தரப்பினர் இணைத்ததாகவும், படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி அதை இணைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக் காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக எனது நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் சர்ச்சை:

பிரபல இயக்குனரின் படத்தில் அவருக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சி இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், படத்தின் நாயகன் அதற்கு அளித்துள்ள விளக்கம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. மழை பிடிக்காத மனிதன் விஜய் ஆண்டனியுடன், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும், சரண்யா பொன்வண்ணன், ரமணா, ஏ.எல். அழகப்பான், தலைவாசல் விஜய் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

அடையாளத்தை மறைத்து வாழும் இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இதில் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தரப்பிற்கும், விஜய் மில்டனுக்கும் இடையே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இந்த பேச்சுவார்த்தை சரத்குமார் முன்னிலையில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியது, இந்த சூழலில், நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிலர் இந்த படம் சலீம் படத்தின் தொடர்ச்சி என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதன் காரணமாகவே, இது சலீம் 2 இல்லை என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: என்னம்மா கண்ணு! சத்யராஜின் "மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்" போஸ்டர் ரிலீஸ்!

மேலும் படிக்க: Vijay: ”அவசரப்பட்டுட்டேன்; இன்னொரு படம் நம்ப பண்ணியிருக்கலாம்” - தி கோட் பார்த்து வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்ன வார்த்தை

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget