Watch Video: 50-க்கு மேற்பட்ட யாசகர்கள்.. அழைத்து பிரியாணி விருந்து வைத்த விஜய் ஆண்டனி.. வைரலாகும் வீடியோ!
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் திருப்பதியில் பிச்சைக்காரர்களுக்கு போர்வைகள், செருப்புகள் மற்றும் மின்விசிறிகளை விஜய் ஆண்டனி வழங்கியுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த மே 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழில் போதிய அளவில் விமர்சனங்கள் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், தெலுங்கில் சக்கைபோடு போட்டு வருகிறது. ஆனாலும், கடந்த வாரம் ஒட்டுமொத்த இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் 28 கோடியை வசூல் செய்தது.
#Bichagadu2 Tirupati pic.twitter.com/DHz7dnM2nc
— vijayantony (@vijayantony) May 26, 2023
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் திருப்பதியில் பிச்சைக்காரர்களுக்கு போர்வைகள், செருப்புகள் மற்றும் மின்விசிறிகளை விஜய் ஆண்டனி வழங்கியுள்ளார். தொடர்ந்து அவர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டார். இதுகுறித்தான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை வைரலானது. அப்போது பேசிய அவர், பிச்சைக்காரந் 3 படத்தை தயாரிக்க போவதாகவும், 2025ம் ஆண்டுக்குள் அது தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், ’பிச்சைக்காரன் - 2’ படத்தின் வெற்றி விழா இன்று விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஆண்டனி, 50 க்கு மேற்பட்ட யாசகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை அழைத்து பிரியாணியுடன் கூடிய விருந்து வைத்தார். அந்த வீடியோவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஜய் ஆண்டனி #பிச்சைக்காரன்எமோஷனல்பயணம் என்று பதிவிட்டு இருந்தார்.
#BichagaduEmotionalJourney pic.twitter.com/ZNumFZOCG2
— vijayantony (@vijayantony) May 27, 2023
விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 விஜய் ஆண்டனி மற்றும் காவ்யா தாப்பர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், ராதா ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார்.
கடந்த 2010ல் வெளியான பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சியாகதான் பிச்சைக்காரந்2 படத்தின் கதைக்களம் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், கதை கிட்டதட்ட ஒரு பாதையில் பயணம் செய்கிறது. பிச்சைக்காரன் 2 படம் முதல் படம் அளவிற்கு வெற்றிகரமாக ஓடவில்லை.
படம் வெளியாக பிரச்சினை:
’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து கடந்த மே 19ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இந்தபடம் தன் படத்தி்ன் கதை என ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்காக விஜய் ஆண்டனி 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து விஜய் ஆண்டனி தன் படம் வெளியாவதைத் தடுப்பதற்காக உள் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும், பொருளாதார ரீதியாக இழப்பையும் உளைச்சலையும் தான் சந்தித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக மலேசியாவின் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். அப்போது, அவருக்கு மூக்கு, தாடை எலும்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஒரு மாத கால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அவர் குணமடைந்து படப்பிடிப்புக்குத் திரும்பினார்.