மேலும் அறிய

Jayalalithaa: திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற வையாபுரி.. வெளுத்து வாங்கிய ஜெயலலிதா.. இந்த கதை தெரியுமா?

எனக்கு திருமணம் முடிவாகியிருந்த நிலையில், நான் ஜெயலலிதாவுக்கு பத்திரிக்கை கொடுக்க முடிவெடுத்திருந்தேன். ஒருநாள் சாயங்கலம் 7 மணிக்கு அவர் உங்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார்கள் என தகவல் கிடைத்தது.

திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்ற இடத்தில் ஜெயலலிதா கேட்ட ஒரு கேள்வி தன் வாழ்க்கையை மாற்றி விட்டதாக நடிகர் வையாபுரி கூறியுள்ளார். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய வையாபுரி, ஜெயலலிதா அம்மா என்னைப் பார்த்து இதென்ன கல்யாண பத்திரிக்கையா இல்ல விசிட்டிங் கார்டா என கேட்டார் என தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை விவரித்துள்ளார். 

எனக்கு திருமணம் முடிவாகியிருந்த நிலையில், நான் ஜெயலலிதாவுக்கு பத்திரிக்கை கொடுக்க முடிவெடுத்திருந்தேன். ஒருநாள் சாயங்கலம் 7 மணிக்கு அவர் உங்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார்கள் என தகவல் கிடைத்தது. நானும் அந்த நேரத்திற்கு சென்று அவரைக் காண உட்காந்திருந்தேன். அப்போது அங்குள்ள கதவு திறக்க உள்ளே இருந்து அம்மன் வருவது போல ஜெயலலிதா அம்மா வந்தார். என்னைப் பார்த்து வாங்க வையாபுரி எப்படி இருக்கீங்க எனக் கேட்டார். உட்காருங்க என உபசரித்து என்ன விசேஷம், கல்யாணமா என கேட்டார். 

நானும் ஆமாம் அம்மா என சொல்லி பத்திரிக்கை எடுத்துக் கொடுத்தேன். பத்திரிக்கையைப் பார்த்து விட்டு என்னை பார்த்தார்கள். பின் என்னிடம் உங்களுக்கு அப்பா அம்மா இருக்காங்களா என கேட்டார். அப்பா இல்லம்மா, அம்மா மட்டும் இருக்காங்க என சொன்னேன். தொடர்ந்து சொந்த பந்தங்கள் எல்லாம் இருக்கிறார்களா என கேள்வியெழுப்பினார். எல்லாருமே இருக்காங்கம்மா என நான் சொல்ல, இந்த பத்திரிக்கையில் உங்க பெயர், மணப்பெண் பெயர், இடம், நேரம் என இதுமட்டும் தானே இருக்கிறது. வேறு எதுவுமே இல்லையே என ஜெயலலிதா கேட்டார். 

நான் அதற்கு, இந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு வழங்குவதற்கு என தெரிவித்தேன். அப்படியா என யோசித்தவர், நண்பர்களுக்கு உங்கள் அப்பா, அம்மா பெயர், குலதெய்வம் பெயரெல்லாம் தெரிந்தால் நீங்கள் அசிங்கமாக உணர்வீர்களா என கேட்டார். எனக்கு அப்படியெ ஒருமாதிரி ஆகிவிட்டது. வேதம்புதிது படத்தில் ஒரு சிறுவன் சத்யராஜிடம் பாலு என்பது உங்க பெயர், தேவர் என்பது நீங்க  படிச்சு வாங்கிய பட்டமா என கேட்கும்போது ஒரு நிலைமை காட்டப்படுமே அந்த மாதிரி பளார் என அறைந்த மாதிரி இருந்தது. 

இனிமேல் வீட்டில் நிறைய விசேஷங்கள் வரும். என்ன வந்தாலும் குலதெய்வம் மற்றும் வீட்டில் பெரியவர்கள் பெயர் கண்டிப்பாக அழைப்பிதழில் இருக்க வேண்டும். அவங்க ஆசீர்வாதம் தான் எப்பவும் உங்களுக்கு இருக்கும் என ஜெயலலிதா சொன்னார். இதற்கிடையில் வெளியில் நிறைய பேர் உங்களைப் பார்க்க காத்திருக்கிறார்கள் என சொல்ல, அவர்களை நான் எப்போதும் பார்க்கிறேன். உங்களை எப்போதாவது தான் பார்க்க முடிகிறது என என்னிடம் உரையாடினார். இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது. அதன்பின்னர் இன்று வரை என் வாழ்க்கையில் என்ன விசேஷம் வந்தாலும் ஜெயலலிதா அம்மா அவர்கள் சொன்னது போல குலதெய்வம், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெயரைப் போட்டு தான் பத்திரிக்கை அடிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jayalalithaa: திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற வையாபுரி.. வெளுத்து வாங்கிய ஜெயலலிதா.. இந்த கதை தெரியுமா?
Jayalalithaa: திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற வையாபுரி.. வெளுத்து வாங்கிய ஜெயலலிதா.. இந்த கதை தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன் படத்தில் இருந்து விலகிய அஸ்வத் மாரிமுத்து !
பிரதீப் ரங்கநாதன் படத்தில் இருந்து விலகிய அஸ்வத் மாரிமுத்து !
Biggboss 10 Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பட்டியல்
Biggboss 10 Contestants : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்களின் பட்டியல்
இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதங்கம் - எதற்காக?
இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதங்கம் - எதற்காக?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: எந்த பலனும் இல்லை..! மேட்டூர் அணையை திறக்கும் CM விஜய், அதிருப்தியில் விவசாயிகள் - பிரச்னை என்ன?
எந்த பலனும் இல்லை..! மேட்டூர் அணையை திறக்கும் CM விஜய், அதிருப்தியில் விவசாயிகள் - பிரச்னை என்ன?
CM Vijay: முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான CM விஜய் - எங்கு? எப்போது தெரியுமா? காரணம் என்ன?
முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான CM விஜய் - எங்கு? எப்போது தெரியுமா? காரணம் என்ன?
CM Vijay: வட இந்தியாவில் கைவரிசை.. விஜய் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மக்களே உஷார்!
CM Vijay: வட இந்தியாவில் கைவரிசை.. விஜய் பெயரை பயன்படுத்தி பண மோசடி.. மக்களே உஷார்!
TTV Dhinakaran: விரைவில் தவெக ஆட்சிக்கு முடிவு.. அடித்துச் சொன்ன டிடிவி தினகரன்.. என்ன காரணம்?
TTV Dhinakaran: விரைவில் தவெக ஆட்சிக்கு முடிவு.. அடித்துச் சொன்ன டிடிவி தினகரன்.. என்ன காரணம்?
Japanese Luxury Car: 25KM மைலேஜில் களமிறங்கிய ஜப்பானின் சொகுசு ஹைப்ரிட் கார் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி?
25KM மைலேஜில் களமிறங்கிய ஜப்பானின் சொகுசு ஹைப்ரிட் கார் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி?
TN Temples: தமிழ்நாட்டின் 52 கோயில்களில் செல்போனுக்கு தடை.. இன்று முதல் அமல்... எந்தெந்த இடங்களில்?
TN Temples: தமிழ்நாட்டின் 52 கோயில்களில் செல்போனுக்கு தடை.. இன்று முதல் அமல்... எந்தெந்த இடங்களில்?
TN Weather News: 14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை
14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : ரூ. 5000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு இன்று குஷியா.? தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ...
ரூ. 5000 குறைந்தது.! நகைப்பிரியர்களுக்கு இன்று குஷியா.? தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ...
Embed widget