Vaseegara | 20 வருஷத்துக்கு முன்னாடி.. வசீகரா ஷூட்டிங்குல.. நினைவுகளை பகிர்ந்த விஜயின் நண்பர்!
நடிகர் விஜயின் நண்பர்களில் ஒருவரான ஸ்ரீமான், விஜயுடன் நடித்த ஒரு திரைப்படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரசிகர்கள் உண்டு. மாஸ் ஹீரோவாக அறியப்படும் விஜய் தன்னுடைய தொடக்கக் காலங்களில் காதல் நாயகனாகவே வலம் வந்தார். தன் தந்தையின் இயக்கத்தில் பல படங்களில் விஜய் நடித்துள்ளார். அந்தக்காலக்கட்டத்தில் இருந்து நடிகர் விஜய்க்கு சினிமாவில் சில நண்பர்கள் உண்டு, ஸ்ரீநாத், சஞ்சீவ், ஸ்ரீமன் உள்ளிட்டவர்கள் அந்த லிஸ்டில் உண்டு. இப்போது மிகப்பெரிய நடிகர் என்றாலும் எப்போதும் தன் நண்பர்களுக்கென தனி இடத்தை கொடுப்பதை விஜய் மறப்பதில்லை. பரபரப்பாக பல பட வேலைகள் சென்றுகொண்டிருந்தாலும் அவ்வப்போது நண்பர்களை சந்திப்பதை விஜய் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜயின் நண்பர்களில் ஒருவரான ஸ்ரீமன், விஜயுடன் நடித்த ஒரு திரைப்படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். செல்வ பாரதி இயக்கிய வசீகரா திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு காட்சிக்காக விஜயும், ஸ்ரீமனும் ஒரே மாதிரியான பொஷிசனில் அமர்ந்திருக்க வேண்டி இருந்துள்ளது. காலை முதல் மதியம் வரை அதே காட்சிக்காக நடித்துள்ளனர். இது குறித்து பதிவிட்டுள்ள ஸ்ரீமன், இருபது வருடங்களுக்கு முன்பு, காலை முதல் மதியம் வரை இந்த பொஷிசனில் இருந்து நாங்கள் மாற முடியவில்லை. திரும்ப திரும்ப எடுக்கப்பட்டது. உடனடியாக இயக்குநர் பிரேக் என்று சொன்னார். மதியம்தான் அந்த சீன் முடிவுக்கு வந்தது. மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
வசீகரா திரைப்படத்தில் விஜய், சினேகா, வடிவேலு, நாசர், காயத்ரி ஜெயராமன், மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜயின் நண்பரான ஸ்ரீமன், சில காட்சிகளே வந்துபோனார். சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜயுடன், ஸ்ரீமன் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி சுக்ரன், போக்கிரி, அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா, பைரவா உள்ளிட்ட பல படங்களில் விஜயுடன் இணைந்து ஸ்ரீமன் நடித்திருந்தார்.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் பிஸியாக இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Twenty years back, we never got up from the position till break, just went on and on and on till the scene got over. Suddenly director said break and it was one noon the scene too got over. Unforgettable day pic.twitter.com/vTyMFGc39i
— actor sriman (@ActorSriman) August 16, 2021