Soori Praises Nandhan : நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலாம இருக்கு! சூரி போட்ட போஸ்ட்..
Soori Praises Nandhan : சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பார்த்து பிறகு எக்ஸ் தள பக்கம் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.
இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகரானவர்களில் ஒருவர் சசிகுமார். 'சுப்ரமணியபுரம்' என்ற எவர்கிரீன் கிளாசிக் ஹிட் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து கொண்டார். இயக்குநராக ஒரு சில படங்களை கொடுத்த சசிகுமார் பின்னர் நடிப்பின் மீது கவனம் செலுத்த துவங்கினார். ஏராளமான படங்களில் நடித்து வந்தாலும் அவரை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் வெளியான 'அயோத்தி' மற்றும் கருடன் படங்கள் அவருக்கு கம்பேக் படங்களாக அமைந்து வெற்றியையும் கொடுத்தன.
அதன் தொடர்ச்சியாக தற்போது உடன்பிறப்பே படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் 'நந்தன்' என்ற படத்தில் நடித்துள்ளார். உண்மையை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அதை வெளியிட திட்டமிடப்பட்டது. வரும் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
— Actor Soori (@sooriofficial) September 3, 2024
அன்பு இரா. @erasaravanan அண்ணனுக்கும், @SasikumarDir அண்ணனுக்கும், @GhibranVaibodha brother. நந்தன் குழுவினர்க்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் #Nandhan 💐🙏👍 pic.twitter.com/HIulDkKSjW
'நந்தன்' படத்தை பார்த்த நடிகர் சூரி தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
"படம் பார்த்து பல மணி நேரங்கள் ஆகிறது - நந்தன் தந்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை!
அன்பு அண்ணன் இரா. சரவணன், அண்ணன் சசிகுமார் மற்றும் தம்பி ஜிப்ரானுக்கும், நந்தன் குழுவினருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார்.