![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Puranaanooru : சூர்யா வெளியே..சிவகார்த்திகேயன் லோகேஷ் கனகராஜ் உள்ளே...புறநாநூறு புதிய அப்டேட்ஸ்
சுதா கொங்காரா இயக்கவிருக்கும் புறநாநூறு படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகக் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
![Puranaanooru : சூர்யா வெளியே..சிவகார்த்திகேயன் லோகேஷ் கனகராஜ் உள்ளே...புறநாநூறு புதிய அப்டேட்ஸ் actor sivakarthikeyan and lokesh kanagaraj on board for sudha kongara puranaanooru Puranaanooru : சூர்யா வெளியே..சிவகார்த்திகேயன் லோகேஷ் கனகராஜ் உள்ளே...புறநாநூறு புதிய அப்டேட்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/28/9eb15c51cefbd65a90ed14038232661c1724837345420572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புறநாநூறு
சூரரைப் போற்று படத்திற்கு பின் இயக்குநர் சுதா கொங்காரா மற்றும் சூர்யா இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கவிருந்த படம் புறநாநூறு. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம் , விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக உருவாக இருந்த இப்படம் சூர்யாவின் கால் ஷீர் காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. பின் இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து படக்குழு சார்பாகவோ இயக்குநர் சுதா கொங்காரா சார்பாக எந்த வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை.
புறநாநூறு படத்தில் சிவகார்த்திகேயன்
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி புறநாநூறு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் நடிகரி ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்காக சிவகார்த்திகேயன் லோகேஷ் கனகராஜூக்கு சமீபத்தில் லுக் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத் தக்கது.
🔥 Breaking news in Kollywood! #SreeLeela is set to make her epic debut in #Sivakarthikeyan's highly-anticipated #Puranaanooru! 🚀 Directed by the brilliant Sudha Kongara 🎬. The photoshoot just dropped and it’s absolutely fire! 📸🔥 Brace yourselves for a game-changing cinematic… pic.twitter.com/QeIzdBr25s
— The Cine Scout (@TheCineScout) August 26, 2024
சூர்யா 44
ஒரு பக்கம் கங்குவா ரிலீஸூக்காக காத்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44 -வது படமாக உருவாகும் இப்படத்தில் ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , பூஜா ஹெக்டே , கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்கள் முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக மாலத்தீவில் நடைபெற்ற படப்பிடிப்பு பின் அடுத்தகட்டமாக நீலகிரியில் நடந்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)