STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
சிம்பு நடிக்கும் புதிய படத்திற்காக அப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஸ்பென்சர் ப்ளாசாவில் ஏராளமான பொருட்களை வாங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகராக உலா வருபவர் சிலம்பரசன். எஸ்.டி.ஆர்., சிம்பு என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது 49வது படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
சிம்புவின் புதிய படம்:
இந்த படத்தில் தம், மன்மதன், வல்லவன் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா கலந்த கலவையாக சிம்பு 90ஸ் கிட்ஸ் மோடில் நடிப்பதாகவும் சிம்புவே தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.
இதில் 2000-களில் கலக்கிய தனது மாஸ் லுக்கில் சிம்பு போஸ்டர் இருந்தது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஸ்பென்சர் ப்ளாசாவில் ஏராளமான பொருட்களை வாங்கியுள்ளார்.
The list I made to bring back the vintage STR for the announcment poster. Thank you Spencer Plaza 😎 @SilambarasanTR_ pic.twitter.com/PgaIrtYyQt
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 22, 2024
இத்தனை பொருட்களா?
அதன் பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பொருட்களின் விவரத்தை கீழே காணலாம்.
- ஸ்டார்
- ஹார்ட்/ உடைந்த இதயம்
- சைக்கிள் செயின்
- கையில் கட்டும் கருப்பு கயிறு
- ப்ளேட்
- மோதிரம்
- ஒரு கையில் மட்டும் சுற்றும் கைக்குட்டை
- இசைக் குறியீடு
- பச்சை மோதிரம்
- மன்மதனே பாடலில் உள்ள வெள்ளை சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ்
இந்த பொருட்களை எல்லாம் ஸ்பென்சரில் வாங்கியதாக அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்:
சிம்பு நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு பத்து தல படம் வெளியானது. உடல் எடை அதிகரித்த பிறகு சிம்பு குறைவான படங்களிலே நடித்து வந்தார். பின்னர், மீண்டும் கடும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து தனது பழைய தோற்றத்திற்கு திரும்பினார். ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே தற்போது நடித்து வரும் சிம்பு தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர். 48 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகளவில் எழுந்துள்ளது. ஏனென்றால், சிம்பு தனது பழைய பாணியில் திரைப்படம் நடித்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 41 வயதாகியுள்ள சிம்புவிற்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது புதிய பட அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.