மேலும் அறிய

6 Years of AAA: சிக்கிய சிம்பு.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. 6 வருடங்களை கடந்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’..!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியாகி இன்றோடு 6 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

சிலம்பரசனின் சோதனை காலம் 

தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் பல பிரச்சினைகளில் தானாகவே சிக்கிக்கொள்ளும் நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பு, டான்ஸ், இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைக் கொண்ட அவருக்கு 2015 ஆம் ஆண்டில் இருந்தே சோதனை காலம் தொடங்கியது எனலாம். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவருக்கு ரெட் கார்டு போடும் அளவுக்கு இழுத்துச் சென்றது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். 

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

2017ஆம் ஆண்டு  ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் 3 வேடங்களில் சிம்பு நடித்திருந்தார், மேலும் ஸ்ரேயா, தமன்னா, மகத் ராகவேந்திரா, விடிவி கணேஷ் என பலரும் இணைந்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் சிம்புவின் சினிமா கேரியரில் ‘மிக மோசமான படம்’ என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது. 

ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்த சிம்பு

மதுரை கூலிப்படையைச் சேர்ந்த ரவுடியான சிம்பு (மதுரை மைக்கேல்) ஸ்ரேயாவின் காதலுக்காக ரவுடித் தனத்தை விட்டுவிட நினைக்கும் நேரத்தில், கைது செய்யப்படுகிறார். பின்னர் ஜெயிலில் இருந்து தப்பித்து ஸ்ரேயாவை கரம் பிடிப்பார் என நினைத்தால் அது தான் இல்லை. ஸ்ரேயாவுக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கிறார்.

இதன்பின்னர் துபாயில் பெரிய தாதாவாகி, பின்னர் சென்னையில் ஒரு தாத்தாவாகி (அஸ்வின் தாத்தா) 20 வயது பெண் தமன்னா மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ இளைஞர் சிம்புவை (திக்கு சிவா) காதலிப்பதாகச் சொல்கிறார். இதனால் டென்ஷனாகும் தாத்தா சிம்பு தமன்னாவை பழிவாங்க துடிப்பதை, ரசிகர்களை பலி  கொடுக்கும் வகையில் மெகா அறுவையான படைப்பை வழங்கியிருந்தார். 

முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது என்ற போதே இந்த படத்தின் ரிசல்ட் தெரிந்திருக்கும். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதாகவே தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர்.  யுவன் ஷங்கர் ராஜா தன் பங்குங்கு வேலையை செவ்வேன செய்திருந்தார். 

 சிக்கிய சிம்பு.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

இந்த படம் தியேட்டரில் 2 பாகங்களாக வெளியாவதாக இருந்தது. ஆனால் முதல் பாகமே படுதோல்வி அடைந்ததால் சிம்பு ரசிகர்கள் நொந்து போயினர். இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்  இருவரும் செய்தியாளர்களை சந்தித்து சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொன்னர். சிம்பு பல மாற்றங்களை செய்தார். பெரிய நட்சத்திரத்தை ஒப்பந்தம் செய்துவிட்டதால் வேறு வழியின்றியே அவர் சொன்ன மாதிரி படமெடுத்தேன். அவர் தான் 2 பாகமாக எடுக்க வேண்டும் என சொன்னார் என புகார் கொடுத்து சிம்புவுக்கு ரெட் கார்டு போடும் அளவுக்கு சென்றது பிரச்சினை.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
கரை சேர்ந்ததா கலையரசனின் காதல் கதை...டைட்டானிக் திரைப்பட விமர்சனம்
தலைமுடி வியாபாரத்தின் இருண்ட பக்கம்! வெற்றியின் ‘பிளாக் கோல்டு’ எப்படி?
தலைமுடி வியாபாரத்தின் இருண்ட பக்கம்! வெற்றியின் ‘பிளாக் கோல்டு’ எப்படி?
இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு!
இனிகோ பிரபாகரின் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு!
‘சிட்டுக்குறிஞ்சி’ இசை வெளியீட்டு விழா: நவம்பர் 27-ல் திரைக்கு வரும் புதிய படம்
‘சிட்டுக்குறிஞ்சி’ இசை வெளியீட்டு விழா: நவம்பர் 27-ல் திரைக்கு வரும் புதிய படம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
TVK: இனி யாராவது ஓவராக ஆட்டம் போட்டால் பதவி காலி.. அதுமட்டுமல்ல.. தவெக பொதுச்செயலாளர் எச்சரிக்கை
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் தோனி - திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்!
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Embed widget