”என்னது நான் செத்துட்டேனா !? !” - வைரல் மீமுக்கு பதில் கொடுத்த சித்தார்த்!
”என்னது சித்தார்த் இறந்துவிட்டாரா?” என ரசிகர்கள் உணர்ச்சி வேகத்தில் அந்த வீடியோவை பிளே செய்வார்கள் என்பதற்கான நூதன முறைதான் இது..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டரில் செம ஆக்டிவ். சினிமா தொடர்பான செய்திகள் தவிர்த்து அரசியல் பார்வையும் இவருக்கு அதிகம். பொதுவாக நடிகர்கள் தலையிட தயங்கும் பல விஷயங்களிலும் கூட துணிச்சலாக தனது கருத்துக்களை பதிவிடுவார். தனது துணிச்சல் மிகுந்த கருத்துகளாலேயே பல ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சித்தார்த் இறந்து விட்டதாக வெளியான செய்தியின் மீம் ஒன்று இணையத்தில் வலம் வர அதைக்கண்ட சித்தார்த் அதிர்ச்சியடைந்து , அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரிப்ளை கொடுத்துள்ளார்.
பொதுவாக யூடியூபில் நடிகர் நடிகைகளின் சாதிகள், திருமணம், சொத்து மதிப்புகள் என்ன? என்பது குறித்த வீடியோக்கள் உலா வருவதை கண்டிருப்போம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக யூடியூப் சேனல் ஒன்று இளம் வயதில் இறந்த நடிகர்கள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் சௌந்தர்யா, ஆர்த்தி அகர்வால் போன்ற மறைந்த நடிகைகளில் புகைப்படங்களுக்கு இடையில் சித்தார்த் புகைப்படத்தையும் இணைத்து யூடியூப் thumbnail வைத்துள்ளனர். ”என்னது சித்தார்த் இறந்துவிட்டாரா?” என ரசிகர்கள் உணர்ச்சி வேகத்தில் அந்த வீடியோவை பிளே செய்வார்கள் என்பதற்கான நூதன முறைதான் இது. இந்த வீடியோவின் thumbnail ஐ கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் மீமாக மாற்றி இதனை இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். இந்நிலையில் இது நடிகர் சித்தார்த் கண்ணில் பட , உடனே அதை ரீட்வீட் செய்த சித்தார்த் “ இந்த சேனல் தொடர்பாக பல வருடங்களுக்கு முன்னதாகவே சம்பந்தப்பட்ட யூ ட்யூபிடம் புகார் அளித்தேன். அதற்கு அவர்கள் “மன்னித்துவிடுங்கள் ஆனால் இந்த வீடியோவில் எந்த பிரச்சனையும் இல்லை ” என பதிலளித்தனர். அதை கேட்டது எனக்கு ’அடப்பாவி’ என இருந்தது என்பது போல குறிப்பிட்டுள்ளார்.
I reported to youtube about this video claiming I'm dead. Many years ago.
— Siddharth (@Actor_Siddharth) July 18, 2021
They replied "Sorry there seems to be no problem with this video".
Me : ada paavi 🥺 https://t.co/3rOUWiocIv
இது போன்ற வீடியோக்களிம் தம்ப்நெயில் மட்டுமே இப்படியாக இருக்கும் , உள்ளே சென்று பார்த்தால் இறந்தவர்கள் குறித்த விவரங்களை மட்டுமே பதிவேற்றியிருப்பார்கள். இப்படி உயிருடன் இருக்கும் நடிகரின் புகைப்படங்களை பகிர்ந்தால் வியூவ்ஸ் அதிகமாக கிடைக்கும் என்பதாலேயே இத்தகைய இழிவான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்த செய்தியை முன்னதாகவே அறிந்திருந்த சித்தார்த் அதற்கு காமெடியாகவே தற்போது பதிலளித்துள்ளார். ஆனாலும் டிவிட்டரில் பலரும் யூடியூப் சேனலின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சித்தார்த் நடிப்பில் தற்போது டக்கர், சைத்தான் கி பச்சா ஆகிய படங்கள் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மகா சமுத்திரம் என்ற திரைப்படம் மூலம் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கவுள்ளார் சித்தார்த்