மேலும் அறிய

திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?

”சிவாஜி கணேசன்,நான், பாண்டியராஜன் ஆகியோர் முத்துக்கள் மூன்று என்ற படத்தில் நடித்தோம். antha padaththin shuu

படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தபோது சிவாஜி கணேசனுக்கு பேச்சு வராமல் போன சம்பவத்தை நடிகர் சத்யராஜ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம். 

தமிழ் சினிமாவின் நடிப்புக்கு இலக்கணமாக பல தலைமுறை கடந்தும் போற்றப்படுபவர் சிவாஜிகணேசன். இன்றளவும் அவரின் படங்களும், வாழ்க்கை வரலாறும் சினிமாத்துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் ஒரு நேர்காணலில் சத்யராஜிடம், “ஒருநாள் குன்னூரில் இருந்து பிரபு எனக்கு போன் செய்தார். என்னாச்சு என கேட்டதற்கு கதறி அழுகிறார். என்னால பேச முடியல சத்யராஜ் அண்ணன்கிட்ட கொடுக்கிறேன் என கூற, நீங்களும் ரீசிவரை வாங்கி ஓவென அழுதீர்கள். எனக்கு இப்போது நினைத்தாலும் அந்த சம்பவம் அப்செட்டாக இருக்கும். அப்பாவுக்கு அப்போது உங்களுடன் தான் ஷூட்டிங் இருந்தது” என ராம்குமார் கேள்வி எழுப்பினார். 

அந்த நினைவுகளைப் பகிர்ந்த சத்யராஜ்,”சிவாஜி கணேசன்,நான், பாண்டியராஜன் ஆகியோர் முத்துக்கள் மூன்று என்ற படத்தில் நடித்தோம். அப்பா, அம்மா இரண்டு பேரும் ஷூட்டிங் வந்தார்கள். ஒரே ரகளையாக படப்பிடிப்பு சென்றுக் கொண்டிருந்தது. நான் அப்போது நாள் ஒன்றுக்கு 1000 முறை ஸ்கிப்பிங் செய்வேன். அதைப் பார்த்து விட்டு பிரபுவிடம் சிவாஜி கேட்டுள்ளார். 

உடனே பிரபு என்னிடம் வந்து, நீங்கள் செய்வதை அப்பாக்கு தெரியாத மாதிரி செய்யக்கூடாதா என நகைச்சுவையாக கேட்டார். குன்னூர் மாதிரி அமைதியான இடத்தில் நான் என் அறையில் ஸ்கிப்பிங் குதித்ததால் எழுந்த சத்தத்தை வைத்து சிவாஜி அப்படி கேட்டார். திடீரென பார்த்தால் அந்த ஷூட்டிங்கில் ஒரு நாள் காலை சிவாஜிக்கு பேச்சு வரவில்லை. எனக்கு அதைப் பார்த்ததும் அழுகை வந்துச்சு. நம் யார் வசனத்தைப் பார்த்து சினிமாவுக்கு வந்தோமோ அவருக்கே பேச்சு வரமாட்டேங்குதே என்ற கவலை எழுந்தது. அப்போது பிரபு மேட்டுப்பாளையத்தில் தான் ஷூட்டிங்கில் இருந்தார். 

அவரை தொடர்புக் கொண்டு விஷயத்தை சொல்ல ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தார். அப்பாவைப் பார்த்ததும் கதறி அழுதார். உடனே டாக்டர் குழு வந்து சிவாஜியை பரிசோதனை செய்தனர். அவர்களிடம் கேட்டதற்கு, உடல்நலத்திற்கு ஒன்றுமில்லை. ஆனால் பேச்சு எப்போது வரும் என தெரியாது என்று கூறியதைக் கேட்டது எனக்கு செம அதிர்ச்சியாகி விட்டது.  அவருக்கு பக்கவாதம் வந்து விட்டது. அப்பாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு மறுநாள் காலையில் சென்று பார்த்தால் வாடா என பேசினார். என்ன பயந்துட்டியா, ஏன் அப்படி அழுதாய் என கேட்டார். அந்த படம் நடித்த பின்னர் தான் புதிய வானம், ஜல்லிக்கட்டு ஆகிய படங்களில் நடித்தோம் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget