Santhanam: படத்தில் நடிக்க அழைத்த சந்தானம்.. கதவை பூட்டி டார்ச்சர் செய்த பவர் ஸ்டார் சீனிவாசன்!
கடந்த 2013ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படம் வெளியானது. இப்படம் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க வந்த கதையைப் பற்றி காணலாம்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா..
கடந்த 2013ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் வெளியானது. இப்படத்தில் மறைந்த நடிகர் சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங், கோவை சரளா, விடிவி கணேஷ், பட்டிமன்றம் ராஜா, சுவாமிநாதன், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் எனப் பலரும் நடித்திருந்தனர். தமன் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இயக்குநர் கே.பாக்யராஜ் நடிப்பில் வெளியான “இன்று போய் நாளை வா” படத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியான காலத்தில் தனது படத்தை காப்பியடித்து எடுத்து விட்டதாக கே.பாக்யராஜ் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிரபலமான பவர் ஸ்டார்
இதனிடையே இந்தப் படம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. காமெடியான அவரது கேரக்டர் படத்துக்கே பிளஸ் ஆக அமைந்தது. அவரை இந்த படத்தில் நடிக்க அழைத்து வந்தது பற்றி நடிகர் சந்தானம் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதாவது, “கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அந்த ஒரு கேரக்டரை மணிகண்டன் எழுதி விட்டார். 3 பேரில் நானும், சேதுவும் ஒரு ஒரு கேரக்டர் செய்யலாம் என முடிவெடுத்து விட்டோம். இன்னொரு கேரக்டருக்கு யாரையெல்லாமோ யோசித்து பார்க்கிறோம். செட் ஆகவே மாட்டேங்குகிறார்கள்.
அக்கு பஞ்சர் மருத்துவர்
அப்ப தலைவர் பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா படம் பேனர் ஒன்றை பார்த்து அப்ரோச் பண்ணினோம். நாங்கள் போய் அவரிடம் “எங்க படத்துல நடிக்க வர்றீங்களா?” எனக் கேட்டோம். அதற்கு பவர் ஸ்டார் சீனிவாசன், “நீங்கள் பேனர் பார்த்து என்னை நடிக்க கூப்பிட்டது ரொம்ப தப்பு. நான் நடிச்ச படம் பார்த்து முடிவு பண்ணுங்க” என சொல்லி லத்திகா படத்தை போட்டு காட்டினார். எங்களுக்கு ஏன்டா வந்தோம் என்றாகி விட்டது. கதவை வேறு பூட்டி விட்டுச் சென்று விட்டார். படம் முழுக்க ஒரே சத்தமாக இருந்தது. வெளியே வந்து எங்களுக்கு ஓகே.. நீங்க நடிக்க வாங்க என சொல்லி அப்படத்தில் ஒப்பந்தம் செய்தோம்” என சந்தானம் தெரிவித்திருந்தார்.
அக்குபஞ்சர் மருத்துவரான சீனிவாசன் லத்திகா என்ற படம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சினிமா மீது இருந்த தீவிர ஆர்வம் காரணமாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.