மேலும் அறிய

Santhanam: "சாமியே இல்லனு சுத்திட்டு இருந்த ராமசாமி" பெரியாரை விமர்சித்தாரா சந்தானம்! கிளம்பிய சர்ச்சை

சாமியே இல்லன்னு சொன்ன ராமசாமி என்ற வசனம் தந்தை பெரியாரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளதாக சந்தானத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பொங்கலை முன்னிட்டு நடிகர் சந்தானம் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

 

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் சந்தானம். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் கிக், டிடி ரிட்டர்ன்ஸ், 80ஸ் பில்டப் ஆகிய 3 படங்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்துள்ளார். சந்தானத்தை வைத்து ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு வெளியான டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் மேகா ஆகாஷ்  ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா,மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் என பலரும் நடித்துள்ள நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி படம் பிப்ரவரி 2 ஆம்  தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த படத்தில் தாடியுடன் சந்தானம் இருக்கும் கெட்டப் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ட்ரெய்லர் வெளியானது. அதில் ”சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? என்ற சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் வீட்டில் விளக்கு ஏற்றும் வீடியோவை பதிவிட்டு அதனுடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வசனத்தையும் இணைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார். 

இதில் சாமியே இல்லன்னு சொன்ன ராமசாமி என்ற வசனம் தந்தை பெரியாரை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளதாக சந்தானத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிலர் சந்தானத்தை அவர் சார்ந்த சாதி ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் திராவிட கட்சிகளால் போற்றப்படும் பெரியார் பற்றி சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இப்படி ஒரு வசனம் வைத்துள்ள நிலையில், அதனை உதயநிதி ஸ்டாலினின்  ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடலாமா? என சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget