இதுவும் நல்லாதான் இருக்கு...தனிமையிலே இனிமை காணும் ஜெயம் ரவி..இன்ஸ்டாவில் வீடியோ
தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து அறிவித்த பிறகு நடிகர் ரவி மோகன் தனியாக வசித்து வரும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் ஜெயம் ரவி. முதல் படமே ஹிட் படமாக் அமைய அடுத்தடுத்து தனது அண்ணன் இயக்கிய ரீமேக் படங்களில் நடித்தார். ஒருபக்கம் ரொமான்ஸ் இன்னொரு பக்கம் ஃபேமிலி சப்ஜெக்ட்களில் நடித்து தனக்கேன ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.
மனைவியுடன் விவாகரத்து
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கோலிவுட் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்றாக இருந்து வந்தது ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி. இப்படியான நிலையில்தான் நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்தார். இந்த விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் இணையத்தில் வதந்திகளாக பரவின. தனது திருமண உறவில் தான் மதிக்கப்படவில்லை என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஜெயம் ரவிக்கும் கெனிஷா பிரான்சிஸ் என்கிற பாடகிக்கும் உறவு இருப்பதாக சமூக வலைதளங்கள் பரவின. இந்த வதந்திகளை ஜெயம் ரவி மறுத்தார். விவாகரத்திற்கு பின் தற்போது தனியாக வசித்து வருகிறார். சினிமாவில் அவர் சம்பாதித்த சொத்துக்கள் அவர் மனைவியிடமே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
நடித்து வரும் படங்கள்
சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். தற்போது சுதா கொங்காரா இயக்கிவரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜீனி , கராத்தே பாபு ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் கராத்தே பாபு படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகி பரவலாக கவனமீர்த்தது. அமைச்சர் சேகர் பாபுவின் வாழ்க்கைத் தழுவி இப்படம் உருவாகி வருகிறது.
தனிமையில் இனிமை காணும் ரவி மோகன்
View this post on Instagram
ஒரு பக்கம் சினிமா இன்னொரு பக்கம் நிம்மதியான வாழ்க்கை என வாழ்ந்து வருகிறார் ரவி மோகன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவி மோகன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் ரவி மோகன் தனது வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த வேலை செய்வதெல்லாம் நன்றாக இருக்கும் என தான் நினைத்து பார்க்கவில்லை என இந்த வீடியோவில் அவர் கேப்ஷன் வைத்துள்ளார். விவாகரத்திற்கு பின் ஜெயம் ரவி தனிமையில் இனிமை காண்பதை பார்த்து அவரது ரசிகரகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.





















