மேலும் அறிய

Ram Charan: நடிகர் ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்! வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!

Ram Charan: வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா ஏப்ரல் 13ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வேந்தரும், சினிமா தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தலைமையில் இந்த விழாவானது நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் கலந்து கொண்டுள்ளார். 

 

Ram Charan: நடிகர் ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்! வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!

ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் :

நடிகர் ராம் சரண் திரைப்பயணத்தை கவுரவித்து பாராட்டும் வகையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த விருதினை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீதாராம் வழங்க உள்ளார். மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் ஷங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

முக்கிய பிரமுகர்களின் வருகை :

மேலும் இந்த பட்டமளிப்பு விழாவில் சந்திரயான் விண்கல திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் டாக்டர் பி. வீரமுத்துவேலுவுக்கும் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச அளவில் பிரபலம் :

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமா துறையில் கால் பதித்து இருந்தாலும் அவருக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் ராம் சரண். ஏராளமான படங்களில் நடித்துள்ள ராம் சரணுக்கு எஸ்.எஸ். ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தில் நடித்தது மிக பெரிய பெயரை பெற்று கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் அவரின் மதிப்பு உயர்ந்துள்ளது. அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமூக அரசியல் அமைப்பை சார்ந்த ஒரு ஆக்ஷன் படமான "கேம் சேஞ்சர்" படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

Ram Charan: நடிகர் ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்! வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா!


'கேம் சேஞ்சர்' படம் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஷங்கர். கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் ஷங்கரின் 'இந்தியன் 2' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புச்சி பாபுவின் RC16 :

'கேம் சேஞ்சர்' படத்தை தொடர்ந்து புச்சி பாபு சானாவின் இயக்கத்தில் RC16 என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். கிராம கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர்  சிவராஜ்குமார் நடித்து வருகிறார். 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget