அரை பாட்டிலை குடித்துவிட்டு அராஜகம் பண்ணிட்டார்...மாற்றி மாற்றி போட்டுகொடுத்த இளையராஜா ரஜினி
இசைஞ்சானி இளையராஜாவின் பாராட்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இருவரும் தங்கள் இளமை கால நினைவுகளை கலகலப்பாக பேசினர்

இளையராஜா பாராட்டு விழா
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பணியை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் இளையராஜா மற்றும் ரஜினி தங்கள் இளமை கால நினைவுகளைப் பற்றி கலகலப்பாக பேசிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இளையராஜா திமிரை கேள்விகேட்க முடியாது
இளையராஜா பற்றி ரஜினி பேசியபோது " இளையராஜா பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு வெறும் வெற்றிகள் மட்டுமே வரக்கூடாது. அவ்வப்போது தோல்விகளும் வந்தால் தான் அந்த வெற்றியில் அருமை தெரியும். இளையராஜா கொடிகட்டி பறந்தபோது தான் இன்னொரு இசையமைப்பாளர் வந்தார். தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நான் உடபட எல்லாரும் அந்த புதிய இசையமைப்பாளரை தேடிச் சென்றார்கள். ஆனாலும் தி நகரில் இருந்து பிரசாத் லேப்பிற்கு அதிகாலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் சென்றுகொண்டு தான் இருந்தது. இளையராஜவின் சகோதரர் , மனைவி ஜீவா , மகள் பவதாரிணி இறந்தார். எதுவும் அவரை பாதிக்கவில்லை. சலமேயில்லாமல் அவர் இசையமைத்துக் கொண்டிருந்தார். 82 வயதிலும் சிம்பனி இசையை அரங்கேற்றி இருக்கிறார். அவருடைய உலகமே வேறு. இளையராஜாவின் திமிரை யாரு கேள்வி கேட்க முடியாது அதற்கு அவர் தகுதியான ஆள்தான்.
குடித்துவிட்டு நடிகைகளைப் பற்றி கிசுகிசு
இளையராஜா மற்றும் ரஜினி இணைந்து தங்கள் பழைய நினைவுகளையும் இந்த மேடையில் கலகலப்பாக பேசினர். "ஜானி படத்திற்கு இசையமைத்த போது இயக்குநர் மகேந்திரனும் நானும் குடித்துக் கொண்டிருந்தோம். இளையராஜாவிடம் சாமி உங்களுக்கும் வேணுமா என்று கேட்டதும் சரி என்றார். அரை பாட்டில் பீரை குடித்துவிட்டு இவர் பண்ண ஆர்பாட்டம் இருக்கே. அதிகாலை மூன்று மணி வரை நடிகைகளைப் பற்றி கிசுகிசு பேசிக் கொண்டிருந்தார். அப்போது எல்லாம் இவருக்கு ஒரே லவ்வுதான். அதை எல்லாம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் சொல்கிறேன்" என ரஜினி பேசினார்.
Thalaivar #Rajinikanth & #Ilayaraja's Hilarious Speech at #IlayarajaSymphony Event 😂😂 pic.twitter.com/uJnNZxdOp9
— Rakks🌟 (@rakks_twitz) September 13, 2025





















