மேலும் அறிய

Actor Parthiban: குழந்தைகளை மையப்படுத்திய கதை.. நடிகர் பார்த்திபனின் அடுத்தப்படம் டைட்டில் இதுதான்!

Gavamic Ary  ஒளிப்பதிவாளராகவும், சுதர்சன் எடிட்டராகவும் பணியாற்றுகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அடுத்தப்படம் குறித்த டைட்டில் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி பிரபலமானவர்களில் மிக முக்கியமானவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். வித்தியாசமான கதை, அதில் புதிய முயற்சி என ஒவ்வொரு படமும் ஜெயித்தாலும், தோற்றாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். தொடர்ந்து தனது முயற்சியை மெருகேற்றிக் கொண்டே வருவார். கடைசியாக பார்த்திபன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரவின் நிழல் படம் வெளியாகியிருந்தது. 

முழுக்க முழுக்க சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்ததோடு மட்டுமல்லாமல் பார்த்திபன் முயற்சிக்கு வெகுவான பாராட்டுகளும் கிடைத்தது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனது அடுத்தப்படம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த பார்த்திபன் அதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். குறிப்பாக இமான் இசையில் ஸ்ருதி ஹாசன், வெளிநாட்டு பாடகி ஜானகி ஈஸ்வர் உள்ளிட்ட பலரும் பாடுகின்றனர். 

கடந்த பொங்கலன்று கூட இசையமைப்பாளர் இமானை பாராட்டி, “அருகில் இருந்து பார்த்து ஆச்சர்யப்பட்டு நான் பாராட்டித் தீர்த்து,நீங்களும் பாராட்ட Mr Imman ! கிட்டார் இசை கலைஞர் அன்றே கிட்டார் என்பதால் தன் வாய்மையில் அதையும் இசைத்து அசத்துவதை மட்டுமல்ல, மாட்டும் மணிநேரங்களில் மாட்டும் சூழல்களுக்காக (situations) மாட்டும் மெட்டுகளில் மாட்டும் வரிகளில் பாடல் அன்றி,சிறந்ததாக மாட்டும் வரை காத்திருந்து 7 பாடல்கள் என் அடுத்ததில் ! மாட்டு(ம்) பொங்கல் வாழ்த்துகள் ! அந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பார்த்திபனின் அடுத்தப்படம் டைட்டில் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோவில், “ஒரு திகிலான சாகசம் என்ற அடைமொழி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவில், ஆழ்கடல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல் அந்த டைட்டில் வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு “டீன்ஸ் (Teenz)" என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. 

இதில் கிரியேட்டிவ் புரொடியூசராக பார்த்திபனின் மகள் கீர்த்தனா பணியாற்றுகிறார். மேலும் Gavamic Ary  ஒளிப்பதிவாளராகவும், சுதர்சன் எடிட்டராகவும் பணியாற்றுகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோ வீடியோவை இசைத்துறையில் சாதனைப் படைத்து வரும் லிடியன் நாதஸ்வரம் தனது சமூக வலைத்தளத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget