மேலும் அறிய

''என் படத்தில் சேரி மக்களே ஹீரோ..'' இரவின் நிழல் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”.

சேரிப்பகுதிகள் குறித்து நடிகை பிரிகிடா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது எழுதி இயக்கி, நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் “ இரவின் நிழல்”. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் கடந்த ஜூலை 15 ஆம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். 

இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதனிடையே பார்த்திபனிடம் உதவி இயக்குநராக வேலை செய்ய வந்த பிரிகிடாவுக்கு இரவின் நிழலில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்தப்படத்தில் நிர்வாண காட்சி ஒன்றிலும் அவர் நடித்திருந்தார். 

இதற்கிடையில் பிரிகிடா அளித்த பேட்டி ஒன்றில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படங்களை அனைவரும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். படத்தில் அவ்வளவு கெட்ட வார்த்தை இருக்க கூடாதுதான். இங்கு ஒருவனது வாழ்கையில் கெட்டது மட்டுமே நடந்திருக்கிறது. அப்படியானால் அவனது வாழ்கையை அப்படித்தான் சொல்ல முடியும். சேரிகளுக்கு போனால் நாம் அந்த மாதிரியான வார்த்தைகளைத்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ரொம்பவும் மாற்றி விட முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கு போனால் எப்படி பேசுவார்கள் என்று.. அந்த மாதிரியான விஷயங்களை இந்தப்படத்தில் தவிர்க்கவே முடியாது என கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது. பலரும் பிரிகிடாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரிகிடா தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அந்த வார்த்தைகளை சொன்னதற்கு நான் வருந்துகிறேன்! இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது, ​​மொழியும் மாறுகிறது என்பதைத் தெரிவிக்க முயற்சித்தேன். அதற்காகநான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். 

இதனை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே! என கூறியுள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
சிபிராஜின் புதிய அவதாரம்...தயாரிப்பாளராக களமிறங்க என்ன காரணம்?
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
Mari Selvaraj: பெரும் மனநிறைவை  கொடுத்த படம்.. டோரதி படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Embed widget