மேலும் அறிய

ஹோட்டலில் நடிகையுடன் தங்கியிருந்த பிரபல நடிகர்... கையும் களவுமாக பிடித்த 3வது மனைவி

ரம்யா ரகுபதி கூறுகையில் சிறந்த நண்பர்கள் என்று கூறிக்கொண்டு இருவரும் இரவு முழுவதும் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நரேஷையும்,  நடிகை பவித்ராவையும் நரேஷின் 3வது மனைவி ரம்யா தாக்க முயன்ற சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகர் நரேஷ், பிரபல நடிகரான மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் ஆவார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்துப் பெற்ற நரேஷ் 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். நரேஷின் இந்த முடிவுக்கு காரணம் தமிழில் கௌரவம்,  அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விஷேசம் ஆகிய படங்களில் நடித்த பவித்ரா லோகேஷ் தான் என கூறப்படுகிறது. 

பவித்ராவும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இருவரும் பல இடங்களில் ஒன்றாக வலம் வரும் நிலையில் காதலிப்பதாக கூறப்படும் செய்திகளை மறுத்து வந்தனர். அதேசமயம் தங்களின் விவாகரத்துக்கு காரணம் பவித்ரா தான் எனவும், எனக்கும் நரேஷூக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை எனவும் ரம்யா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனிடையே நரேஷூம், பவித்ராவும் மைசூரில் உள்ள ஹோட்டல் அறையில் ஒன்றாக தங்கியிருப்பதாக ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அவர் அங்கு சென்ற போது தகவலறிந்து இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது ரம்யா பவித்ராவை செருப்பால் அடிக்க முயன்றார். இதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் நரேஷ் ரம்யாவை பார்த்து விசில் அடித்துக் கொண்டே கேலி செய்தபடி அங்கிருந்து சென்றார்.இதுதொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரம்யா ரகுபதி கூறுகையில் சிறந்த நண்பர்கள் என்று கூறிக்கொண்டு இருவரும் இரவு முழுவதும் ஒரே அறையில் ஒன்றாக தங்குகின்றனர். எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே விவாகரத்து பெற விண்ணப்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். அதேசமயம்  நரேஷ் உடனான எனது உறவை நான் விளக்க வேண்டியதில்லை என்றும், என்னை அவதூறாகப் பேசுவது மிகவும் வருத்தமளிப்பதாகவும் பவித்ரா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget