Actor Mayilsamy Death: "மயில்சாமி மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு.." ஆளுநர், பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்
குணச்சித்திர நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
![Actor Mayilsamy Death: actor mayilsamy passed away telangana governor tamilisai soundararajan celebrities fans pay condolence Actor Mayilsamy Death:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/19/6da032cf650e3bbfda2f768e583ddb681676776388132589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழில் பல படங்களில் நகைச்சுவை வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான மயில்சாமி, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மயில்சாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
நடிகர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி:
ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார். தனது நகைச்சுவை மூலம் பல சமூக கருத்துக்களை தெரிவித்தவர் மயில்சாமி. தூள் படத்தில் விவேக் – மயில்சாமி ஜோடி மக்கள் மனதில் என்றும் நீங்காமல் இருக்கும் கதாப்பாத்திரமாகும். தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் அவர் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1984ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழிசை சௌந்தராஜன்:
நகைச்சுவை நடிகர் திரு.மயில்சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 19, 2023
கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை
(1/2) pic.twitter.com/s0JFZObpmK
நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். கட்சி எல்லைகள் கடந்து நட்பு பாராட்டியவர்.விருகம்பாக்கம் பகுதி மக்களுக்கு பல சமூக சேவைகளை செய்துள்ளார்.
தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 19, 2023
(2/2)
மேலும் சமூக அக்கறை சார்ந்த கருத்துக்களை தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அவரது மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார்:
இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. பத்திரிக்கையில் இருந்து கேட்டு அறிந்தேன். இதனை நம்ப விரும்பவில்லை என பதிவிட்டுள்ளார்.
நடிகர் மனோபாலா:
தனது ட்விட்டர் பக்கத்தில் மயில்சாமி புகைப்படத்தை பகிர்ந்து கொடுமை என பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறையில் நடிகர்கள் தொடர்ந்து இறப்பது வேதனையாக உள்ளது என்றார்.
நடிகர் யோகி பாபு:
சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்திலிருந்து நன்கு தெரிந்தவர். பலருக்கும் உதவிக்கரம் நீட்டியவர். மயில்சாமியின் மறைவு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகர் சார்லி:
திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார்:
எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது. அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்:
நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy என தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)