மேலும் அறிய

Mayilsamy: விடைபெற்றார் நடிகர் மயில்சாமி... ஏவிஎம் மின்மயானத்தில் உடல் தகனம்: திரண்டு வந்த திரையுலகம்!

மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடல் ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். 

மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமியின் உடல் ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். 

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் மயில்சாமி. ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த மயில்சாமி  தீவிர எம்ஜிஆர் பக்தர் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர், அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் அடிக்கடி தெரிவித்து வருவார்.

மேலும் தேவை என கேட்போருக்கு இல்லை என சொல்லாமல் உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவராகவும் மயில்சாமி திகழ்ந்து வந்தார். எம்ஜிஆர் மட்டுமல்லாமல் தீவிர சிவன் பக்தராகவும் திகழ்ந்த மயில்சாமி ஒவ்வொரு கார்த்திகை தீப விழாவையொட்டியும் திருவண்ணாமலைக்கு  தவறாமல் சென்று வருவாராம். இப்படியான நிலையில் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த மயில்சாமி நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். பின்னர் அதிகாலை வீடு திரும்பிய அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக சென்னை  போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மயில்சாமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், செந்தில், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று ஊர்வலமாக ஏவிஎம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மயில்சாமி சிவ பக்தர் என்பதால் வழியெங்கும் சிவ பக்தர்கள் கைலாயிய வாத்தியங்கள் முழங்க அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பலரும் மயில்சாமியுடனான நினைவுகளை நினைத்து கதறி அழுதனர்.  தொடர்ந்து இறுதிச்சடங்கு முடிந்தவுடன் வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கும் சூர்யா - தனுஷ் ?
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு
3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
IND vs NZ: கோலி - ரோகித் இஸ் பேக்! நாளை தொடங்குது முதல் ஒருநாள் போட்டி! பவுலிங்கில் கம்பேக் தருமா இந்தியா?
Embed widget